Published:Updated:

மதுரை: `கி.மு 5-ம் நூற்றாண்டு இரும்பு உருக்கு உலை?’ - உலைப்பட்டி ஆய்வில் கண்டுபிடிப்பு

தொல்லியல் எச்சங்கள்
தொல்லியல் எச்சங்கள்

கீழடி போன்ற பழங்கால தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் மிகுந்த இடம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள கிராமம்தான் உலைப்பட்டி. இங்கு கி.மு 5 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முதுமக்கள் தாழிகள், கல் வட்டங்கள், குத்துக்கல், கற்பலகைகள் என பண்டைய தமிழர்களின் இறப்புச் சான்றுகள் கிடைத்துள்ளன.

முதுமக்கள் தாழி
முதுமக்கள் தாழி
ஆயக்குடி கல்திட்டை சொல்லும் ஏழுபிறப்பு ரகசியம்? ஆய்வு செய்யுமா தொல்லியல் துறை?

இது தொடர்பாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டுவரும் தொல்லியல் ஆய்வாளர் சக்திவேல் நம்மிடையே பேசும்போது, “பேராசிரியர்கள் முருகேசன் மற்றும் சென்ராயப் பெருமாள் ஆகியோர் அளித்த தகவலின் பேரில்தான் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. குறிப்பாக, பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற ஈமச் சடங்குகள், அதன் நடைமுறைகளுக்கான எச்சங்கள் பார்க்க முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான இரும்பு உருக்கு உலை இருந்திருக்க வேண்டும். அதற்கான எச்சங்களும் இங்கே உள்ளன. அவை கி.மு 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

சக்திவேல்
சக்திவேல்
மதுரை: `என்னைப் பார்த்து 10 பேராவது படிப்பாங்க!’ - கல்லூரிக் கனவு; அரசு உதவிகோரும் மாணவி

இப்பகுதியில் விரிவான ஓர் தொல்லியல் ஆய்வினை மேற்கொண்டால், இதுவரை கிடைத்திராத பல ஆச்சர்ய விசயங்கள் நமக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆய்வின் விளைவாக, கீழடி போன்ற, பழங்கால தமிழர்களின் வாழிடம் கண்டுபிடிக்கப்படும்” என்றார். முன்னதாக, மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வே.சத்திரப்பட்டிக் கண்மாயில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தபோது, மூன்று சதி கற்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு