Published:Updated:

மதுரை: `புலி வேட்டை வீரர்கள்; 8 அடி உயரம்!’ - ஆச்சர்யம் தரும் புலிக்குத்தி நடுகல்

நடுகல்
நடுகல்

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில், பழங்கால நினைவுச் சின்னங்கள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டுவருவது தொல்லியல் ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், நல்லுத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மொட்டைமலைப் பகுதியில், 8 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைப் புலிக்குத்தி நடுகல் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

நடுகல்
நடுகல்
மதுரை: `கி.மு 5-ம் நூற்றாண்டு இரும்பு உருக்கு உலை?’ - உலைப்பட்டி ஆய்வில் கண்டுபிடிப்பு

நம்மிடையே பேசிய தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், “இப்பகுதியில் ஒரு காலத்தில் புலிகள் வாழ்ந்திருக்கலாம். அந்த நேரத்தில், புலிகளை வேட்டையாடும் வீரர்களின் நினைவாக, இந்தப் புலிக்குத்தி நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு முதல் மூன்று அடி உயர நடுகற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக, இங்குதான் 8 அடி உயர நடுகல் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்கலில் இது மிகப்பெரியது.

நடுகல்
நடுகல்
கீழடி: `5,820 தொல்பொருள்கள்!’ - அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

இப்பகுதியில் இரும்பு உருக்கு தொழிற்சாலைகள் இயங்கி வந்ததற்கான அடையாளங்களும் உள்ளன. மேலும், சுமார் 4 ஆயிரம் ஆண்டு பழைமையான கற்காலத்தைச் சேர்ந்த கற்கள், வட்டக்கல் உள்ளிட்டப் பொருள்கள் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக உசிலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு அரிய பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் கிடைத்து வருகின்றன. இதை உசிலம்பட்டியில் அருங்காட்சியகம் வைத்து காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.

இரும்பு உருக்கு ஆலை எச்சங்கள்.
இரும்பு உருக்கு ஆலை எச்சங்கள்.

முன்னதாக, உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டியில், கி.மு 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பேரையூர் அருகே மூன்று சதி கற்கள் கண்டுபிடுக்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு