Published:Updated:

மதுரை: பழைமையான கிரந்த எழுத்து கல்வெட்டு, சிற்பம் கண்டுபிடிப்பு... கடவுளாக வழிபடத் தொடங்கிய மக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிரந்த எழுத்து படியெடுக்கப்படுகிறது
கிரந்த எழுத்து படியெடுக்கப்படுகிறது

மதுரையை சுற்றி தொடர்ந்து கிடைத்து வரும் தொல்லியல் அடையாளங்கள் தொல்லியல் ஆர்வலர்களை ஈர்த்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழரின் தொன்மை நாகரிக பெருமையை பறைசாற்றும் அடையாளங்கள் மதுரையைச் சுற்றி அமைந்துள்ளன. இவற்றை தொல்லியல்துறை மூலம் அரசு ஆய்வுகள் நடத்திவரும் நிலையில், தொல்லியல் ஆர்வலர்களும் தனியாக பலவற்றை கண்டுபிடித்து வருகிறார்கள்.

கிரந்த எழுத்து கல்வெட்டு
கிரந்த எழுத்து கல்வெட்டு

அந்த வகையில் மதுரை மாவட்டம் கருவேலம்பட்டி அருகே, சுமார் 500 ஆண்டு பழைமையான கிரந்த எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருவேலம்பட்டி பகுதியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கள ஆய்வு செய்தபோது தனி பாறையில் கிரந்தம் கல்வெட்டும் புடைப்பு சிற்பமும் கண்டறியப்பட்டன.

கிரந்த எழுத்து கல்வெட்டு
கிரந்த எழுத்து கல்வெட்டு

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முனைவர் து. முனீஸ்வரன், "சூரிய பிரகாஷ் என்பவர் கொடுத்த தகவலின்படி கருவேலம்பட்டி அருகே தனியார் விவசாய நிலத்தில் தனி பாறையில் 2 அடி அகலம், 4 அடி நீளம் கொண்ட 4 வரிகளில் கிரந்தம் எழுத்துகளுடன் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்ததில் கோபாலகிருஷ்ணன் மகன் என்ற வரியில் தொடங்கி நான்காவது வரியில் தம்மம் என்ற சொல்லில் முடிவு பெறுகிறது. தம்மம் என்ற சொல் இருப்பாதல் தானம் வழங்கப்பட்டது என அறிய முடிகிற இக்கல்வெட்டு காலப்போக்கில் மழை, வெயில் போன்றவாற்றால் தேய்மானம் ஏற்பட்டு சிதைந்துவிட்டதால் தொடர்ச்சியான பொருளை அறிய முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இக்கல்வெட்டின் இடதுபுறம் உள்ள பாறையில் 2 அடி அகலம் 3 அடி நீளம் கொண்ட புடைப்பு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நீண்ட காதுகளுடன், கழுத்தில் அணிகலன் அணிந்த ஆணின் சிற்பமும், சரிந்த கொண்டையுடன், நீண்ட காதும் கையில் வளையல் அணிந்து சற்று சாய்ந்த நிலையில் பெண் சிற்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் வாழ்ந்த தலைவன் தலைவிக்காக உருவாக்கப்பட்டிக்கலாம். அதிகமான தேய்மானம் ஏற்பட்டதால் முகம் தெளிவற்று காணப்படுகிறது.

கிரந்த எழுத்தைப் படியெடுக்கும் து.முனீஸ்வரன்
கிரந்த எழுத்தைப் படியெடுக்கும் து.முனீஸ்வரன்

இக்கல்வெட்டு மற்றும் சிற்பத்தினை தமிழக தொல்லியல் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் சொ.சாந்தலிங்கம் ஐயா உதவியுடன் ஆய்வுசெய்தபோது கி.பி.16-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என அறிய முடிகிறது. தற்போது மக்கள் இச்சிற்பத்தை நீலன், நீலி என்று தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்" என்றார்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் சார்பில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் குழுவினர் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு