Published:Updated:

மதுரை: பெரிய கண்மாய் மடையில் பழங்காலக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு... சொல்லும் தகவல் என்ன?

மதுரையைச் சுற்றி தொடர்ந்து கிடைத்து வரும் தமிழரின் தொன்மை நாகரிகத்தின் அடையாளங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை அருகே கீழடியைச் சுற்றி நான்கு இடங்களில் 7-ம் கட்ட தொல்லியல் அகழாய்வு மூலம் தமிழர்களின் தொன்மை நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டுவருகின்றன.

மதுரை
மதுரை

அதைப்போலவே மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புராதனமான சிலைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் எனத் தொன்மை அடையாளங்கள் கிடைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திவருகிறது.

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே வில்லூர் பெரிய கண்மாய் மடையில் கி.பி.9 ,13, 16-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியலாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில், பேராசிரியர் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன் நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் வில்லூரில் கள ஆய்வு செய்தபோது பெரிய கண்மாய் மடைப் பகுதியில் துண்டுக் கல்வெட்டுகளைக் கண்டெடுத்துள்ளனர்.

முனைவர் து.முனீஸ்வரன்
முனைவர் து.முனீஸ்வரன்

இதுபற்றி முனைவர் முனீஸ்வரன், "செழிப்பான விவசாயப் பகுதியாக விளங்கிய இவ்வூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் மூன்று கண் மடை அமைந்துள்ளது.

முதல் கண்ணின் சுவர் பக்கவாட்டில் ஒரு அடி நீளம் அரை அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது கண்ணில் சுவரின் உட்புறமாகச் செருகப்பட்ட நிலையில் 3 வரி கொண்ட கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இக்கல்வெட்டு நீர் வழிந்தோடும் இடத்தில் இருப்பதால் சொற்கள் அழிந்த நிலையில் பொருள் அறிய முடியவில்லை.

13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு
13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு

கண்மாயின் மூன்றாவது கண் மடையில் வலப்புறச் சுவரின் ஒரு அடி அகலம், மூன்று அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில், 'சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் நன்' என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டினைப் படியெடுத்து, தமிழகத் தொல்லியல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற முனைவர் சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்தோம். எங்கே விஷம் தீண்டினாலும் குருவோடு குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கிவிடும் என்ற பொருள் அறிந்தோம். இக்கல்வெட்டினை வேறு பகுதியிலிருந்து எடுத்து வந்து இந்தப் பெரிய கண்மாய் கண் மடை கட்டப்பட்டிருக்கலாம்" என்றார்.

16ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு
16ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு

மதுரை மாவட்டத்தில் சமீப காலத்தில் தொடர்ந்து தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையில் தொன்மையின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டுவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு