Published:Updated:

திருவண்ணாமலை: சுமார் 3,000 ஆண்டுகள் பழைமை; இரும்பு உருக்காலை எச்சங்கள், சின்னங்கள் கண்டுபிடிப்பு!

பழங்கால ஊதுகுழல், கல் ஆயுதம், பானை ஓடுகள்

"இந்த இரு மலைப்பகுதியின் மத்தியில் பெரிய சமவெளி பரப்பு காணப்படுகிறது. இப்பகுதி, அக்கால மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கக் கூடும்."

திருவண்ணாமலை: சுமார் 3,000 ஆண்டுகள் பழைமை; இரும்பு உருக்காலை எச்சங்கள், சின்னங்கள் கண்டுபிடிப்பு!

"இந்த இரு மலைப்பகுதியின் மத்தியில் பெரிய சமவெளி பரப்பு காணப்படுகிறது. இப்பகுதி, அக்கால மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கக் கூடும்."

Published:Updated:
பழங்கால ஊதுகுழல், கல் ஆயுதம், பானை ஓடுகள்
திருவண்ணாமலை மாவட்டம், வெடால் அருகே உள்ள 'மாந்தாங்கல்' என்னும் கிராமத்தில் பெருங்கற்கால வாழ்விடம், தொழிற்கூடம் மற்றும் ஈமச்சின்னங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை திருவண்ணாமலை மரபு சார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்ட அந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வம், "வந்தவாசி வட்டம், குணகம்பூண்டியை ஒட்டிய பகுதிகளில் நண்பர்களான பழனி, விஜயன் ஆகியோருடன் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தோம். அவ்வூரை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தைச்ச்ச் சுற்றிலும் ஏராளமான பெருங்கற்கால சின்னங்கள் இருப்பதை அப்போது கண்டறிந்தோம்.

இரும்பு உருக்கு கழிவுகள்
இரும்பு உருக்கு கழிவுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்றைய மாந்தாங்கல் ஊரின், கிழக்குப் பகுதியில் உள்ள மலையின் அடிவாரத்தில், ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகளும், சுமார் 4 செ.மீ சுற்றளவு கொண்ட இரு துண்டு குழாய்களும் கள ஆய்வின் போது கண்டறியப்பட்டது. பூமியின் மேற்பரப்பிலேயே கண்டறியப்பட்ட இக்குழாய்களின் மத்தியில் உள்ள துவாரம், சுமார் 1 செ.மீ சுற்றளவுடன் காணப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுடுமண்ணால் ஆன இக்குழாய்கள், மேற்பரப்பில் சற்று சிதைவுற்றுக் காணப்படுகின்றன. இரும்பு உருக்கும் உலைகளை எரியூட்டுவதற்காகத் துருத்தி போலத் தூரத்திலிருந்து இதுபோன்ற குழாய்கள் மூலம் காற்றுக் கொண்டுபோவதற்காக இந்த அமைப்பை பயன்படுத்தி இருக்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் ஏராளமான கறுப்பு - சிவப்பு பானை ஓடுகளும், இரும்பு உருக்கு கழிவுகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன்மூலம் பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள்... இரும்பு பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியை உபயோகித்து இருப்பது தெரியவருகிறது.

சமவெளி பகுதி
சமவெளி பகுதி

இந்தப் பகுதியில், 2,500 ஆண்டுகளுக்கு முன் இரும்புக்காலத்தில் வாழ்ந்த ஆதிமனிதன், பாறைகளிலில் இருந்த இரும்பை உலையில் வைத்து தனியாகப் பிரித்தெடுத்து, அதன் மூலமாக கத்தி, ஈட்டி, கோடாரி, வேல் போன்ற பல பொருள்களைத் தயாரித்துள்ளதை அறியமுடிகிறது. இப்பகுதியை ஒட்டிய மலைப்பகுதியின் மற்றொரு புறத்தில் இதற்கு இணையான மற்றொரு நீண்ட மலை காணப்படுகிறது. இந்த இரு மலைப்பகுதியின் மத்தியில் பெரிய சமவெளிப் பரப்பு காணப்படுகிறது. இந்த இடத்திலும் ஏராளமான பானை ஓடுகள் மற்றும் கல்லாயுதங்கள் காணக்கிடைக்கின்றன. மலைகளுக்கிடையே அமைந்துள்ள இச்சமவெளிப் பகுதி, அக்கால மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கக் கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்பகுதிக்கு மேற்கு பகுதியில் ஏராளமான கல்வட்டங்கள் காணப்படுகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெரிய கல்வட்டங்கள் எந்த சிதைவும் இன்றி உள்ளது. மற்ற கல்வட்டங்கள், விவசாயம் மற்றும் ஊர் வளர்ச்சியின் காரணமாகச் சிதைந்து அதன் எச்சங்கள் இன்றளவும் அப்படியே இருப்பதை காணமுடிகிறது.

இங்கு மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இன்றைய மாந்தாங்கல் ஊரின் மயானப்பகுதி, தொன்மை வாய்ந்த இந்த ஈமச்சின்னங்கள் நிறைந்த பகுதியிலேயே அமைந்திருப்பதுதான்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை

சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக, இந்த ஊரின் சாலையோரம் இருந்த பெரிய கல் ஓன்றை நகர்த்திய போது, 'ஈமப்பேழை' ஒன்று இருந்து கண்டெடுக்கப்பட்டது. அது, தற்போது திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் இருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.

சுமார் 3000 வருடங்கள் தொன்மை வாய்ந்த பெருங்கற்கால அடையாளங்கள் உள்ள இவ்வூரில், தொல்லியல் துறையினர் முறையாக அகழாய்வு மேற்கொண்டால் இப்பகுதியின் ஏராளமான புதிய விவரங்கள் வெளி உலகிற்குத் தெரியவரும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism