Published:Updated:

கீழடி அகழாய்வு இப்போது எந்த நிலையில் இருக்கிறது? | Doubt of Common Man

கீழடி தொல்லியல் ஆய்வுப்பணி
News
கீழடி தொல்லியல் ஆய்வுப்பணி

கீழடியில் தற்போது ஏழாம் கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிதாகச் செங்கல் கட்டுமானங்கள், வாள்கள், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட வட இந்திய வெள்ளி நாணயங்கள் கிடைத்துள்ளன.

Published:Updated:

கீழடி அகழாய்வு இப்போது எந்த நிலையில் இருக்கிறது? | Doubt of Common Man

கீழடியில் தற்போது ஏழாம் கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிதாகச் செங்கல் கட்டுமானங்கள், வாள்கள், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட வட இந்திய வெள்ளி நாணயங்கள் கிடைத்துள்ளன.

கீழடி தொல்லியல் ஆய்வுப்பணி
News
கீழடி தொல்லியல் ஆய்வுப்பணி
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் கந்தசாமி என்ற வாசகர், "கீழடி அகழாய்வு இப்போது எந்த நிலையில் இருக்கிறது? அது பற்றிய தகவல்கள் கிடைக்குமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
doubt of common man
doubt of common man

சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் வண்ணம் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பழந்தமிழ் மக்களின் வாழ்வு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான தரவுகள் கிடைத்திருக்கின்றன. நகரம் சார்ந்த வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளதற்கான சாட்சியமாகக் கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. தொழிற்கூடங்கள், சாயப் பட்டறைகள், வணிக வளாகங்கள் மற்றும் பல செங்கல் தொழிற்சாலைகள் ஆகியன அடங்கிய மேம்படுத்தப்பட்ட நகரமாகக் கீழடி இருந்துள்ளதைக் காண முடிகிறது. 10-க்கும் மேற்பட்ட சங்ககாலக் கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கீழடி ஆய்வு
கீழடி ஆய்வு

வைகை நாகரீகத்தை உயர்ந்ததாக உலகுக்குக் கூறும் கீழடியில் பலவகை மணிக்கற்கள், எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் பிராமி எழுத்துகளுடைய மண்பாண்ட ஓடுகள் உட்பட ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்திலேயே தொழிற்கூடங்கள் இருந்துள்ளது அறியப்பட்டுள்ளது. நூல்நூற்கும் தக்ளி மக்கள் நூல் நூற்று ஆடைகள் அணிந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. பொதுவாக அகழாய்வில் கட்டடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைப்பது அரிது. ஆனால், சங்க காலத்திலேயே செங்கல் கட்டடங்கள் இருந்துள்ளன என்பதை கீழடி ஆய்வு எடுத்துரைத்துள்ளது.

கீழடி தரவுகள் தகவல்கள் நமக்குச் சொல்லும் செய்திகள் ஏராளம். கீழடி ஆய்வுகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு தமிழகத் தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அவர் கூறியதாவது,

"கீழடியில் தற்போது ஏழாம் கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 5-ம் மற்றும் 6-ம் கட்ட ஆய்வுகள் கீழடியில் மட்டும் நடந்து வந்த நிலையில் தற்போது கீழடியைச் சுற்றி இருக்கும் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது புதிதாகச் செங்கல் கட்டுமானங்கள், வாள்கள், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட வட இந்திய வெள்ளி நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை மக்கள் தொலை தூர வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது.

கொந்தகை | கீழடி தொல்லியல் அகழாய்வு இயக்குநர் சிவானந்தம்
கொந்தகை | கீழடி தொல்லியல் அகழாய்வு இயக்குநர் சிவானந்தம்

இதற்கு முன் கிடைத்த உறைக்கிணறுகள் நீர் மேம்பாடு பற்றியும், செங்கல் கட்டிடங்களுக்கு மேல் கிடைத்த ஓடுகள் நாகரீக வாழ்க்கை முறையில் மக்கள் வாழந்து வந்திருந்தனர் என்பதையும் காட்டுகின்றன. பானைகளின் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் பெருமளவில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை விளக்குகின்றன. தங்க ஊசி போன்ற பலவகையான பொருள்கள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன. இந்தப் பொருள்கள் தொழில் வளம் மற்றும் வர்த்தக தொடர்பைக் காட்டும் வண்ணம் உள்ளன. விளையாட்டுப் பகடைகள் (Dice) தங்கத்தில் கிடைத்துள்ளன. கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்கள் அனைத்தும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வக முடிவுகள் மூலம் இன்னும் தெளிவான விளக்கத்தைப் பெற முடியும்" என்று கூறி முடித்தார்.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man