Published:Updated:

முக்கிய வரலாற்று இடங்களுக்கு உயிர் கொடுத்தவர்; சிலைகளை மீட்டவர் - தொல்லியல் தொண்டர் நாகசாமி மறைவு!

முனைவர் நாகசாமி

தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயங்குநர் நாகசாமி தன்னுடைய 92-வது வயதில் மறைந்தார்.

முக்கிய வரலாற்று இடங்களுக்கு உயிர் கொடுத்தவர்; சிலைகளை மீட்டவர் - தொல்லியல் தொண்டர் நாகசாமி மறைவு!

தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயங்குநர் நாகசாமி தன்னுடைய 92-வது வயதில் மறைந்தார்.

Published:Updated:
முனைவர் நாகசாமி

மதுரை திருமாலை நாயக்கர் மஹால் சென்று இருக்கீர்களா? அதன் ஒளியும் ஒலியும் இணைந்த ரம்மியமான சூழல் நினைவுக்கு வந்தால் அதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் முனைவர் நாகசாமி. ஒட்டுமொத்த வாழ்வையே தொல்லியல் மற்றும் வரலாற்று துறைக்கு அர்ப்பணித்தவர் தன்னுடைய இறுதி மூச்சை இந்த மண்ணுலகில் உதிர்த்து சென்றிருக்கிறார்.

தமிழ்நாடு தொல்லியல் துறை என ஒன்று உருவான போது அதன் முதல் இயக்குநர் முனைவர் நாகசாமி. 35 ஆண்டு காலம் தொல்லியல் துறைக்கு பணியாற்றியவர். சென்னை பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத முதுகலை பட்டதாரியானவர், பின்னர் பூனா பல்கலைகழகத்தில் தொல்லியல் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

1930 இல் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் பிறந்த நாகசாமி 1959-1963 வரை சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக தன் பணியைத் தொடங்கியிருக்கிறார். முன்பே இலக்கியத்தில் இருந்த ஆர்வம் வரலாறு, மொழி, தொல்லியல், கலைகள் என அவரை பயணிக்க வைத்திருக்கிறது.

முனைவர் நாகசாமி
முனைவர் நாகசாமி

இன்று நமக்கு காணக் கிடைக்கிற தொல்லியல் எச்சங்களே அவரது பணிக்கான சான்று. இவரது பணியில் ஒழுங்கு செய்யப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் என பட்டியல் இட்டால் புகழூர் சேரர் கல்வெட்டுகள், கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனை இருந்த இடம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் மகால், பாரதியார் பிறந்த வீடு எனப் பட்டியல் நீளும். 12 அருங்காட்சியங்களின் உருவாக்கத்தில் பணியாற்றியவர். சிதம்பரம் நாட்டியஞ்சாலி நிகழ்வின் இணை நிறுவனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொல்லியல் சார்ந்து 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘Master pieces of South Indian Bronzes’, ‘Mahabalipuram (Monumental Legacy) ஆகியவை குறிப்பிடத்தக்க ஆங்கில நூல்கள். 'Vishnu Temples of Kanchipuram' என்கிற நூல் ஒரு சிறு கிராமம் காலனிய ஆட்சிக்காலம் வரை வளர்ந்த கதையைப் பேசுகிறது.

முனைவர் நாகசாமி
முனைவர் நாகசாமி

பத்தூர் நடராஜர் சிலை இங்கிருந்து திருடப்பட்டு இங்கிலாந்தில் வழக்கு நடந்த போது இந்திய அரசின் சார்பில் நிபுணர் சாட்சியம் கூறியவர் நாகசாமி. வரலாறு, கோயில்கள், மதம், சடங்குகள், சமஸ்கிருதம், தமிழ் என அவர் எடுத்துக்காட்டிய மேற்கோள்கள் இந்தியாவிற்கு சிலைகளை மீட்டு கொண்டுவர வழிகோலியது. இது இன்றைக்கும் வரலாற்று ஆய்வாளர்களால் பெருமையோடு நினைவுகூரப்படுகிறது.

2018 பத்ம விபூஷண் விருது பெற்ற நாகசாமிக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றி கடன்பட்டதாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism