Election bannerElection banner
Published:Updated:

கீழடி: 6-ம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவுபெறுகிறது... அடுத்த கட்டம் எப்போது?

கீழடி 6-ம் கட்டம்
கீழடி 6-ம் கட்டம்

கீழடி ஆகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்களைக் கொண்டு வைப்பகம் அமைப்பதற்கான பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 6-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் இந்த மாதம் இறுதியில் முடிவடைவதையொட்டி தமிழகத் தொல்லியல் துறையின் ஆணையர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நேற்று பணிகளைப் பார்வையிட்டார். உடன் தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டனர்.

கீழடி 6-ம் கட்டம்
கீழடி 6-ம் கட்டம்

விலங்கின் எலும்புகள், குழந்தைகளின் எலும்புகள் கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆய்வுமேற்கொண்ட உதயச்சந்திரன், தொல்லியல் பொருள்களின் கால அளவுகோல் மற்றும் தன்மை குறித்து தொல்லியல்துறை மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து 6-ம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து தொல்லியல் பொருள்களையும் பார்வையிட்டார். இதனையடுத்து கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கான மத்திய அரசின் அனுமதி கோருவது தொடர்பாகவும் தொல்லியல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கீழடி அகழ்வாய்வு பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? #MyVikatan

தொடர்ச்சியாக மதுரை செக்கணூரனி அருகேயுள்ள கிண்ணிமங்கலத்தில் உள்ள பள்ளிப்படை கல்தூணில் கண்டறியப்பட்ட கி.மு 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழி எழுத்துகள் குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக நாளை சிவகளையில் ஆய்வு மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீழடி
கீழடி

முன்னதாக கீழடி ஆகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்கள் வைப்பகம் அமைப்பதற்கான பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட உதயச்சந்திரன், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு