‘இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்து இடங்களில், உலகத்தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்’ என்று பட்ஜெட்டின்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘அந்த ஐந்து இடங்களில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூரும் இடம்பெற்றிருப்பது தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும்’ எனக் கருதிய நிலையில், ‘கீழடியில் அருங்காட்சியகம் அமைக்காமல் ஆதிச்சநல்லுாரில் அறிவித்தது சரியா?’ என்ற வாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஆதிச்சநல்லூரில் மறு அகழாய்வு செய்ய மத்திய அரசு தயக்கம்காட்டிவந்த நிலையில், ஆதிச்சநல்லூர், சிவகளையில் மறு அகழாய்வுக்கான ஆரம்பக்கட்டப் பணியை ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது தமிழக அரசு. ‘தமிழகத்தில் அகழாய்வுகள் நடப்பதை மத்திய அரசு விரும்பவில்லை’ என விமர்சனங்கள் எழுந்த நிலையில்தான், ‘ஆதிச்சநல்லூரில் உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வின் முழு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தவரும், ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ நூலாசிரியருமான முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசினோம்.

‘‘பல அறிஞர்கள், `உலக நாகரிகம் தோன்றிய முதல் இடம்’, `உலக நாகரிகத்தின் தொட்டில்’ என்று ஆதிச்சநல்லூரைக் குறிப்பிடுகின்றனர். வங்கதேச அறிஞர் பானர்ஜி, சிந்துசமவெளி நாகரிகத்துக்கும் முந்தையது என்று ஆதிச்சநல்லூர் நாகரிகத்தைக் குறிப்பிடுகிறார்.

2004-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட நான்காம்கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் 169 முதுமக்கள் தாழிகள் இருந்தன. அதில் இரண்டு தாழிகள் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா ஆய்வு மையத்துக்கு கார்பன் சோதனைக்காக அனுப்பப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒரு தாழி கி.மு 905-ம் ஆண்டைச் சேர்ந்தது என்றும், மற்றொன்று கி.மு 791-ம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, ஆதிச்சநல்லூரின் மாதிரி ஆய்வறிக்கையை மட்டும் சமர்ப்பித்தது மத்திய தொல்லியல் துறை. அந்த ஆய்வறிக்கையின் மூலம், ஆதிச்சநல்லூர் நாகரிகம் 2,900 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்துள்ளது. ‘சிசுக்கள் முதல் முதியவர்கள் வரை இறந்த உடல்கள் தனித்தனியான தாழிக்குள் புதைக்கப்பட்டுள்ளன. பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் அப்போதே தயார்செய்யப்பட்டுள்ளன என்பது அங்கு கிடைத்துள்ள துணிகளின் மூலம் அறிய முடிகிறது’ என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் பகுதி இடுகாடாக இருப்பதுபோல் தெரிந்தாலும், கீழடியில் கிடைத்ததைப்போன்று நகரம் கிடைக்கவில்லை. இடுகாட்டைவிட நகரம் பழைமையான தாகத்தானே இருக்கும்! ஆகவே, ‘ஆதிச்சநல்லூரின் முழு அறிக்கையையும் வெளியிட வேண்டும்’ என்பதுதான் எங்களின் முக்கியக் கோரிக்கை. ‘மத்திய அரசிடம் அறிக்கை பெறப்பட்டு முதல்வரே அதை வெளியிடுவார்’ என்று தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். ஆகையால், என்னைப் போன்றோர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். ஆனால், இதன் முழுவிவரம் தெரியாமல் ‘கீழடி பெரியதா... ஆதிச்சநல்லூர் பெரியதா’ என்று, அரசியல் கட்சியினர் பலர் அறிக்கை வெளியிட்டுவருகின்றனர். ஆதிச்சநல்லூரைப் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் அதன் வரலாற்றை நன்கு அறிய வேண்டும். கீழடிக்காக குரல்கொடுக்க பலர் இருந்தனர். ஆனால், ஆதிச்சநல்லூருக்காக குரல்கொடுக்க மதுரை உயர் நீதிமன்றம் மட்டுமே இருந்தது.

ஆதிச்சநல்லூரை பலரும் இடுகாடு என்றும், புதைகுழி என்றும் சொல்லிவருகின்றனர். அது இடுகாடாக இருக்கும்பட்சத்தில் அங்கு புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடம் எங்கே போனது? ஒரு வீட்டை பிரமாண்டமாகக் கட்டியெழுப்ப முதலில் அஸ்திவாரம் போடுவது போல், ஆதிச்சநல்லூர் குறித்த முழுமையான ஆராய்ச்சிக்கான அஸ்திவாரம்தான் இந்த அருங்காட்சியக அறிவிப்பு. ஆதிச்சநல்லூர் குறித்த தொடர் ஆய்வுகளுக்கு இந்த அருங்காட்சி யகம் தொடக்கப்புள்ளியாக இருக்கும். இதுமட்டு மல்லாது, இதுவரை வரலாற்று, தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமே விவாதிக்கப் பட்டுவந்த ஆதிச்சநல்லூர் நாகரிகம், மத்திய அரசின் அறிவிப்பால் அனைத்து மக்களிடமும் விவாதப்பொருளாகியுள்ளது. இதனால் கீழடிக்கு இணையான தமிழரின் தொன்மம் வெளிப்படும். எனவே, இதை அரசியலாக்காமல் வரவேற்பதுதான் பொருத்தமானது.

இதை எதிர்த்து கீழடிக்காக குரல் கொடுப்பவர்களை நினைத்தால், ‘ஆதிச்சநல்லூர் இந்தியாவில் இல்லாமல் வேறு எங்கு உள்ளது?’ என்று மத்திய அரசைப் பார்த்து முன்பு ஒருமுறை நீதியரசர் கிருபாகரன் கேட்ட கேள்விதான் நினைவுக்குவருகிறது. ஆதிச்சநல்லூர், கீழடி இரண்டுமே தமிழரின் தொன்மையை அறிய உதவும் இரு கண்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ஆதிச்சநல்லூர், உலக அரங்கில் பேசப்படுவதற் கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதை, அனைவருமே வரவேற்போம். அதேசமயம், கீழடியின் பெருமையும் உலகுக்கு உணர்த்தப்பட அனைவருமே குரல் கொடுப்போம்!