Published:Updated:

சிவகங்கை: தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் பெருங்கற்கால இரும்பு உருக்காலை..!

சிவகங்கை தொல்நடைக் குழுவினர்

அடுத்தடுத்து இந்தப் பகுதியில் பெருங்கற்கால இரும்புக் கழிவுகளும் இரும்பு உருக்காலை எச்சங்களும் காணக்கிடைப்பதால் இப்பகுதியில் மிகச் சிறப்பாக இரும்பு உருக்கும் தொழிலும் ஆலைகளும் இருந்திருக்கும் என அறியமுடிகிறது - சிவகங்கை தொல்லியல் ஆர்வலர்கள் ஆச்சர்யம்..!

சிவகங்கை: தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் பெருங்கற்கால இரும்பு உருக்காலை..!

அடுத்தடுத்து இந்தப் பகுதியில் பெருங்கற்கால இரும்புக் கழிவுகளும் இரும்பு உருக்காலை எச்சங்களும் காணக்கிடைப்பதால் இப்பகுதியில் மிகச் சிறப்பாக இரும்பு உருக்கும் தொழிலும் ஆலைகளும் இருந்திருக்கும் என அறியமுடிகிறது - சிவகங்கை தொல்லியல் ஆர்வலர்கள் ஆச்சர்யம்..!

Published:Updated:
சிவகங்கை தொல்நடைக் குழுவினர்

``சிவகங்கை அருகே 6 இடங்களில் அடுத்தடுத்து குவியலாக இரும்புக்கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் மூலம் இப்பகுதியில் பெருங்கற்கால இரும்பு உருக்காலைகள் செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது" என்று தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

இரும்பு உருக்காலையின் எச்சம்
இரும்பு உருக்காலையின் எச்சம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து நம்மிடம் பேசிய சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, ``சிவகங்கை பையூர் பகுதியில் கறுப்பு நிற கற்கள் காணப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக்குழுவைச் சேர்ந்த சுந்தரராஜன், நரசிம்மன், சரவணன் ஆகியோருடன் சேர்ந்து ஆய்வு செய்ததில் ராகிணிப்பட்டி கண்மாயில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பான பெருங்கற்கால இரும்பு உருக்காலையின் கழிவு எச்சங்கள் இருப்பது தெரிய வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகில் மற்ற பகுதி மக்கள் அறியும் முன்னே தமிழர்கள் இரும்பு பயன்பாட்டை அறிந்திருக்கின்றனர். இயற்கையான மூலப்பொருள்களிலிருந்து இரும்பை பிரித்தெடுத்து கருவி செய்யும் தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பெற்றிருந்தனர். குடிசைத் தொழில் போல, தேவையான இடங்களில் அவர்களே இரும்பை உருவாக்கியிருக்கலாம். அப்படியான ஒன்றுதான் இங்கு இருந்துள்ளது.

புலவர் கா.காளிராசா
புலவர் கா.காளிராசா

சிவகங்கையிலிருந்து தொண்டி செல்லும் நெடுஞ்சாலையில் பையூர் அருகே வடக்கு பகுதியில் உள்ள ராகிணிபட்டி கண்மாயில் ஆறு இடங்களில் அடுத்தடுத்து குவியலாக இரும்புக்கழிவுகள் தென்படுகின்றன. இக்கற்களை உடைத்துப் பார்த்தால் இரும்புகளைப்போல காணப்படுகின்றன.

இரும்புக் கழிவுகள் காணப்படும் இடங்களில் மண்ணாலான குழாய்கள் காணப்படுவது இரும்பு உருக்காலைகள் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. இவை இரும்பை வார்த்தெடுக்கவோ, இக்குழாய் வழியாகக் காற்றைச் செலுத்தி நெருப்பை அணையாது வைக்கவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

ஆய்வின்போது
ஆய்வின்போது

மண்ணாலான பெரிய வட்ட வடிவ தொட்டிகளை உருவாக்கி அதில் நெருப்பு உண்டாக்கி இரும்பை உருக்க அணையாது பயன்படுத்தியிருக்கலாம். இவ்வாறான வட்ட வடிவிலான தொட்டிகள், குழிகள் இரும்புக் கழிவுகள் கிடைக்கும் இடத்தில் காணக் கிடைக்கின்றன. இவை தீயை உமிழ்ந்ததால் செந்நாக்குழிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராகிணிபட்டி கண்மாயிலும் செந்நாக்குழி ஒன்றும் இருக்கிறது.

சூரக்குளம் புதுக்கோட்டை, அரசனேரி கீழமேடு பகுதிக்கு இடையில் இருப்புப் பாதைக்கு அருகில் இரண்டு வட்ட வடிவிலான செந்நாக்குழிகளும் இரும்பு உருக்காலை எச்சங்களும் காணக் கிடைக்கின்றன.

சிவகங்கை தொல்நடைக் குழுவினர்
சிவகங்கை தொல்நடைக் குழுவினர்

இதற்கு முன்பு சிவகங்கை உள்ள அரசனேரி கீழமேடு பகுதியில் இரும்பு உருக்காலை எச்சங்களை செந்நாக்குழியோடு கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருந்தோம்.

அடுத்தடுத்து இந்தப் பகுதியில் பெருங்கற்கால இரும்புக் கழிவுகளும் இரும்பு உருக்காலை எச்சங்களும் காணக்கிடைப்பதால் இப்பகுதியில் மிகச் சிறப்பாக இரும்பு உருக்கும் தொழிலும் ஆலைகளும் இருந்திருக்கும் என அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூர், கீழடி, கிருஷ்ணகிரி, மயிலாடும்பாறை போன்ற இடங்களில் கத்தி, வாள் முதலான இரும்பு பொருள்கள் கிடைத்திருப்பது தொன்மையான காலம் தொட்டு தமிழர்களிடையே இரும்பு பயன்பாடு இருந்ததை உறுதி செய்கிறது“ என்றார்.