Published:Updated:

சிவகங்கை: கண்மாயில் கிடைத்த சூலக்கல் கூறும் வரலாற்றுத் தகவல்கள்!

சூலக்கல்
சூலக்கல்

பெரிய நாயகி அம்மன் கோயிலைப் பற்றிய செய்தி அடங்கிய சூலக்கல் கிடைத்திருப்பது கிராம மக்களுக்கும் தொல்லியல் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் கீழடி அரசின் கவனத்திற்குச் சென்று அங்கு 6-ம் கட்ட அகழாய்வு வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஈமச்சின்னம்
ஈமச்சின்னம்

தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் மிக முக்கியக் கல்வெட்டுகளும் கல்வட்டங்களும் முதுமக்கள் தாழிகளும் கிடைத்துவருகின்றன. இந்நிலையில் காளையார் கோவில் அடுத்த மணியங்குடி கிராமத்தில் உள்ள கண்மாயில் சூலக்கல் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.

இதனை கானப்பேரெயில் தொல்லியல் குழுமத்தைச் சேர்ந்த ஜெமினி ரமேஷ், விக்னேஷ்வரன் மற்றும் சரவண மணியன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்துத் தொல்லியல் குழுவினர், "சேது நாட்டினைச் சிறப்புற ஆட்சி செய்த மன்னர் ரகுநாத கிழவன் சேதுபதி. இவரின் மகன்கள் ரணசிங்க சேதுபதி மற்றும் பவானி சங்கர சேதுபதி.

சூலக்கல்
சூலக்கல்

பவானி சங்கர சேதுபதி ஆட்சிக்காலத்தில் இயற்றிய திருப்பணிகளுள் இதுவரை நயினார் கோயிலுக்கு அண்டக்குடி என்ற ஊரினை தானமாக வழங்கியது குறித்த கல்வெட்டு மட்டுமே கிடைத்திருந்தது.

தோண்டத்தோண்ட தாழிகள்... ஆச்சர்யம் தரும் கீழடி அகழாய்வு! #ExclusivePhotos

இந்நிலையில், தற்போது புதிதாகக் கிடைத்துள்ள இந்தச் சூலக்கல் கல்வெட்டில் பவானி சங்கர சேதுபதி, பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு பிலவங்க வருடம் கார்த்திகை மாதம் 29-ம் நாள் சிவராத்திரி அன்று (டிசம்பர் 11, 1727, மாலை 6.45 மணியளவில்) பட்டயமாகக் கொடுத்த நிலக்கொடையைப் பற்றிய தகவல் இருக்கிறது.

சூலக்கல்
சூலக்கல்

மேலும், இதற்குத் தீங்கிழைப்பவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய நாயகி அம்மன் கோயிலைப் பற்றிய செய்தி அடங்கிய சூலக்கல் கிடைத்திருப்பது கிராம மக்களுக்கும் தொல்லியல் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு