Published:Updated:

1974-லேயே கீழடியைக் 'கண்டுபிடித்த' பள்ளி ஆசிரியர்! - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வியப்புப் பகிர்வு

கீழடி
கீழடி

கீழடியில் பள்ளிச்சந்தை திடலில் பானை ஓடுகள் உட்பட பல பழைமையான தொல்பொருள்கள் கிடைப்பதைத் தன் மாணவர்கள் மூலம் கண்டுபிடித்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, 1974-லேயே அரசுக்குத் தெரியப்படுத்தியதாகவும், ஆனால்...

கீழடி ஏறுதழுவதலுக்குப் பிறகு உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த ஒற்றைச் சொல் இதுவே. கடந்த மே மாதத்தில் ஒருநாள், தகிக்கும் வெயிலையும் மீறி எழும்பூரில் இருக்கும் தொல்லியல்துறை அலுவலகம் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து வந்த செய்திதான் அதற்குக் காரணம். மியாமி நகரத்தில் அமைந்துள்ள 'Beta Analytic Testing Laboratory'யில் இருந்து வந்த ஆய்வு முடிவுதான் அது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2VPe3Lx

கீழடியில் நடத்திய அகழாய்வின்போது கிடைத்த கரிமத்துண்டு ஒன்று அமெரிக்கா நோக்கிப் பயணப்பட்டது. 134 கிராம் எடை கொண்டது. 353 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சின்னஞ்சிறு கரிமத்துண்டு, கண்டெடுத்த நேரத்தில், தமிழர்களின் வரலாற்றையே அது மாற்றிவிடப்போகிறது என்று யாரும் யூகிக்கவில்லை. ஆனால், இறுதியில் கிடைத்த ஆய்வறிக்கை அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கீழடி
கீழடி

ஆம், கரிமத்தின் காலம் கி.மு.580 என, அதாவது, 2600 ஆண்டுகள் பழைமையானது என அறிவித்தது அந்த ஆய்வறிக்கை. அதுமட்டுமல்ல, இதுவரை நிலவிவந்த பல புதிர்களுக்கும் விடை கிடைத்தன. தமிழ் எழுத்து வடிவத்தின் காலம், 2600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும் அந்தக் காலத்தில் சங்க காலச் சமூகம் எழுத்தறிவு பெற்றிருந்தது என்ற உண்மையும் தெரியவந்தபோது மே மாதத்திலும் சட்டென வானிலை மாறுவது இயல்புதானே!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நிதித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது, மதுரையைச் சேர்ந்த நண்பர்களிடமிருந்து அழைப்பு. மதுரைக்கு அருகே மத்திய தொல்லியல்துறை நடத்திக் கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கும் தொல்பொருள்கள் மிக முக்கியமானவை என்று செய்தி கிடைத்தது. ஒரு சனிக்கிழமையன்று தனிப்பட்ட முறையில் கீழடிக்கு முதல் முறையாக சென்றது இன்னும் நினைவில் உள்ளது. அமர்நாத் ராமகிருஷ்ணா ஆர்வத்துடன் அழைத்துச் சென்றார். சங்க கால செங்கற் கட்டடங்கள், அரிய தொல்பொருள்கள் எனப் புதிய உலகமே கண்முன் திரண்டது.

கீழடி
கீழடி

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடந்த பகுதியைச் சுற்றிப்பார்க்கும் பொழுது, தொல்லியல் துறை அலுவலர்களோடு வேட்டி கட்டிய முதியவர் ஒருவர் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கீழடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி யின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பாலசுப்ரமணியம் அவர் பெயர். அவர் சொன்ன அந்தச் செய்தி அதிர்ச்சி அளித்தது. கீழடியில் பள்ளிச்சந்தை திடலில் பானை ஓடுகள் உட்பட பல பழைமையான தொல்பொருள்கள் கிடைப்பதைத் தன் மாணவர்கள் மூலம் கண்டுபிடித்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, 1974-லேயே அரசுக்குத் தெரியப்படுத்தியதாகவும், ஆனால், தொல்லியல் துறை தாமதமாகத்தான் வந்திருக்கிறது என்றபோது ஆசிரியரின் அறச்சீற்றம் தெரிந்தது.

- தொல்லியல் துறை செயலர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ஆனந்த விகடன் இதழில் எழுதிவரும் 'மாபெரும் சபைதனில்' தொடரில் கீழடி குறித்த தனது நேரடி அனுபவங்களை முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/social-affairs/miscellaneous/ias-officer-udhayachandran-shares-his-experiences-part-3

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு