Published:Updated:

வெம்பக்கோட்டை அகழாய்வில் நெசவுத்தொழிலுக்கு பயன்படும் தக்களி கண்டுப்பிடிப்பு - ஆய்வாளர்கள் மகிழ்ச்சி

ஆட்டக்காய்கள், தக்களி

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன ஆட்டக்காய்கள், தாயக்கட்டைகள், தக்களி உள்ளிட்டவை கிடைத்துள்ளது ஆய்வாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி தொல்லியல் கள ஆய்வுப் பணியினைத் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்.

தொல்லியல்மேடு களத்தில் அகழாய்வு பணிக்காக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொல்லியல் ஆய்வுக் களத்தில் 75 செ.மீ. ஆழத்தில் பலவண்ண பாசிகள், சுடுமண்ணாலான வட்டச்சில்லுகள், சங்கு வளையல்கள், சங்கு அறுக்க பயன்படும் கருவிகள் கிடைத்தன. தற்போது முதல் குழி 1மீ., இரண்டாவது குழி 80 செ.மீ. ஆழத்தையும் எட்டியுள்ளன.

தாயக்கட்டை
தாயக்கட்டை

தொல்லியல் கள ஆழத்தை அதிகப்படுத்திய நிலையில் சுடுமண்ணாலான ஆட்டக்காய்கள், அழகிய வேலைப்பாடுடன் கூடிய தாயக்கட்டைகள், நெசவுத்தொழில் நூலை சிக்கில்லாமல் பிரிக்கப் பயன்படும் தக்களி ஆகியவை கிடைத்துள்ளன. இவை தவிர சங்கு வளையல்துண்டுகள், சிவப்பு மணிகள் போன்றவையும் கிடைத்துள்ளன. இந்நிலையில் மேலும் ஆழத்தை அதிகப்படுத்தும் போது, பல தொல்லியல் அரிய பொருள்கள் கிடைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism