Election bannerElection banner
Published:Updated:

`கீழடியில் எடைக்கற்கள்... அகரத்தில் வண்ணப் பாசிகள்' -தடைகளைக் கடந்து 6-ம் கட்டம்

கீழடியில் எடைகள்கள்
கீழடியில் எடைகள்கள்

கீழடியில், அவ்வப்போது மழைப் பொழிவால் அகழாய்வுப் பணி நடைபெறுவதில் தொய்வு ஏற்படுகிறது. இப்படி பல கட்ட சிரமங்களுக்கு இடையேதான், 6-ம் கட்ட விரிவான அகழாய்வு நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

 கீழடியில் சிரமங்கள் தாண்டி நடக்கும் பணிகள்
கீழடியில் சிரமங்கள் தாண்டி நடக்கும் பணிகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக, அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் தொடங்கின. ஆனால், மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களில், கடுமையான மழைப் பொழிவு காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அகழாய்வுப் பணி நடைபெறும் குழிகளில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, பணிகள் முழுவீச்சில் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து, மணலூரில் உலை போன்ற அமைப்பும் கீழடியில் பெரிய அளவிலான விலங்கின் எலும்புகளும் கொந்தகையில் முதுமக்கள் தாழியும், மனித எலும்புகளும், அகரத்தில் கி.பி 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன.

கீழடியில்
கீழடியில்

இப்படி, கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தொடர்ச்சியாக 4 இடங்களிலும் சிறப்பு மிக்க பொருட்கள் கிடைத்து வரும் நிலையில்... மதுரை, சிவகங்கைப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்வதால் அகழாய்வுப் பணி நடைபெறுவதில் தொய்வு ஏற்படுகிறது. இருப்பினும் பல கட்ட சிரமங்களுக்கு இடையே விரிவான அகழாய்வு நடைபெறுகிறது.

`6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!' - கீழடி ஆச்சர்யம்

அகரத்தில் நீள வடிவ பாசிகளும், கீழடியில் நுண்ணிய பொருட்களின் எடையைக் கணக்கிடும் எடைக் கற்களும் கிடைத்துள்ளன. இதனால் முந்தைய கீழடி அகழாய்வில் கிடைத்த பாசிகளையும், தற்போது அகரத்தில் கிடைத்த பாசிகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

`கீழடியில் எடைக்கற்கள்... அகரத்தில் வண்ணப் பாசிகள்' -தடைகளைக் கடந்து 6-ம் கட்டம்

இதுகுறித்து தொல்லியல் துறை சார்ந்த நபர்கள் நம்மிடம் பேசுகையில், "தற்போது கிடைத்த பண்டைய கால உருண்டை மற்றும் நீள வடிவிலான வண்ணப் பாசிகள் அகரத்தில் கிடைத்துள்ளன. இவற்றை அப்போதைய செல்வந்தர்கள் தனித்துவமாகத் தெரிய, விரும்பி அணிந்திருக்கலாம். அதை அவர்கள் பெருமையாகவும் எண்ணியிருக்கலாம். மேலும், கீழடியில் கிடைத்த உருளை வடிவிலான கற்கள், மிக நுண்ணிய பொருட்களை எடையிடும் எடைக் கற்கலாகப் பயன்பட்டிருக்கலாம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு