Published:Updated:

வாண்டாயத்தேவன்: மருதநாயகத்தை மிரள வைத்த மாவீரன்; மறைக்கப்பட்ட சுதந்திரப்போராட்ட வரலாறு!

வாண்டாயத்தேவன்
News
வாண்டாயத்தேவன்

எல்லைப் பாளையக்காரராக இருந்த வாண்டாயத்தேவன் பெரும்படையோடு மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்துசென்று கொல்லத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சேரமன்னனை வென்று அச்சுறுத்தலைக் களைந்தார்.

Published:Updated:

வாண்டாயத்தேவன்: மருதநாயகத்தை மிரள வைத்த மாவீரன்; மறைக்கப்பட்ட சுதந்திரப்போராட்ட வரலாறு!

எல்லைப் பாளையக்காரராக இருந்த வாண்டாயத்தேவன் பெரும்படையோடு மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்துசென்று கொல்லத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சேரமன்னனை வென்று அச்சுறுத்தலைக் களைந்தார்.

வாண்டாயத்தேவன்
News
வாண்டாயத்தேவன்
வெள்ளையர்களோடு வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டு உயிர்துறந்த தமிழகப் பாளையக்காரர் பெயர் கேட்டால் எல்லோரும் உச்சரிக்கும் பெயர், வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டப்பொம்மன் ஆட்சியில் அமருவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் வாண்டாயத்தேவன் பற்றி நாம் எந்த வரலாற்றிலும் பெரிதாக வாசித்ததேயில்லை. வாண்டாயத்தேவன், வாண்டையத்தேவன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் அவர்.
வாண்டாயத்தேவன் கோட்டை
வாண்டாயத்தேவன் கோட்டை

மிகச்சிறிய ஒரு களிமண் கோட்டைக்குள் இருந்துகொண்டு ராணுவமும் துப்பாக்கியும் தரித்த ஆங்கிலேயர் படையை புறமுதுகிட்டு ஓடச்செய்த வாண்டாயத்தேவன் பற்றிய சிலிர்ப்பூட்டும் வரலாறு எங்கும் பதிவாகவேயில்லை. வாண்டாயத்தேவனின் வாரிசுகள் சிதிலமடைந்த ஒரு அரண்மனையில் சத்தமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

1857-ம் ஆண்டு, மே 10 அன்று மீரட் நகரில் இந்தியச் சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக நடத்திய போராட்டத்தையே இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று வரலாறுகள் கூவிக்கொண்டிருக்கின்றன. அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே வெள்ளையர்களை ஓடஓட விரட்டியி்ருக்கிறார்கள் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள்.

வாண்டாயத்தேவன் |Representational image
வாண்டாயத்தேவன் |Representational image

தம் தேசத்தை எளிதாக நிர்வகிக்கவும், எல்லைகளைக் கண்காணிக்கவும் யுத்தங்களில் முன்களத்தில் நின்று சண்டையிடவும் நாட்டை பாளையங்களாகப் பிரித்து பாளையக்காரர்களை நியமித்தார்கள் அக்கால மன்னர்கள். அப்படி பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்பவன் உருவாக்கிய பாளையங்களில் ஒன்று கொல்லங்கொண்டான். இந்த பாளையத்தை ஆட்சி செய்தவர்தான் வாண்டாயத்தேவன்.

வாண்டாயத்தேவன் வீரத்துக்குப் பேர் போனவர். மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்தப்புறம் பாண்டியர்களுக்கு சொந்தமானதாகவும் அந்தப்புறம் சேரர்களுக்குச் சொந்தமானதாகவும் இருந்தது. இந்த மலை வழியாக அவ்வப்போது உள்நுழைந்து சேர மன்னர்கள் பாண்டியர்களை அச்சுறுத்தி வந்தார்கள். எல்லைப் பாளையக்காரராக இருந்த வாண்டாயத்தேவன் பெரும்படையோடு மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்துசென்று கொல்லத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சேரமன்னனை வென்று அச்சுறுத்தலைக் களைந்தார். அதனால் மகிழ்ந்த பாண்டியன், வாண்டாயத்தேவனுக்கு 'கொல்லங்கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறான்.

ஆங்கிலேயர்கள்|Representational image
ஆங்கிலேயர்கள்|Representational image

1726-ல் பூழி நாடு என்ற பகுதியை நான்காம் காத்தப்ப பூலித்தேவன் ஆண்டுவந்தார். ஆவுடையாபுரம் இவரது தலைநகராக இருந்தது. 1750ல் ராபர்ட் கிளைவ் திருச்சியில் பிரிட்டிஷ் கொடியை ஏற்றி தென்பகுதியை நிர்வகிக்கும் பாளையக்காரர்கள் அனைவரும் பிரிட்டிஷ் நிர்வாகத்துக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று அறிவித்தார். பூலித்தேவர் உறுதியாக மறுத்தார். அதோடு, பாளையக்காரர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, 'வெள்ளையனுக்கு வரிகொடுக்க மாட்டோம்' என்று அறிவித்தார், பூலித்தேவர் வழியில் அனைத்துப் பாளையக்காரர்களும் 'வரிகொடுக்க மாட்டோம்' என்றுஅறிவித்தார்கள்.

படைகொண்டுத் தாக்கி இவர்களை ஒடுக்கமுடியாது என்று உணர்ந்த பிரிட்டிஷ் நிர்வாகம், யூசுப்கான் என்ற மருதநாயகத்தின் தலைமையில் சுதேசிப்படை என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் பாளையக்காரர்களை அச்சுறுத்தியும் ஆசைகாட்டியும் தங்கள் பக்கம் இழுத்தது. பல பாளையக்காரர்கள் ஆட்சி மிஞ்சினால் போதும் என்று அடிபணிந்தார்கள்.

பூலித்தேவரின் தலைநகரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் கொல்லங்கொண்டான் பாளையம் இருந்தது. அக்காலக்கட்டத்தில் கொல்லங்கொண்டான் பாளையத்தை ஆட்சி செய்தவர் பெரியசாமி வாண்டாயத்தேவன். வாண்டாயத்தேவனும் பூலித்தேவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். வெள்ளையர்களின் அழுத்தத்துக்கு அஞ்சி பிற பாளையக்காரர்கள் அடிபணிந்துவிட்ட சூழலி்ல் பூலித்தேவருக்கு தோளுக்கு தோள் நின்றார் வாண்டாயத்தேவன்.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் சிலை
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் சிலை

"யூசுப்கான் பூலித்தேவரை அடிபணிய வைக்க நிறைய முயற்சி செய்தான். ஆனால் அவரை நெருங்க விடாமல் வாண்டாயத்தேவன் அரணாக நின்றார். அதனால் யூசுப்கானின் கோபம் வாண்டாயத்தேவன் பக்கம் திரும்பியது. வாண்டாயத்தேவன் குறித்து யூசுப்கான் எழுதிய குறிப்புகள் பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் இப்போதும் இருக்கிறது. ஆனால் வரலாறு எழுதியவர்களின் பார்வையில் அதெல்லாம் படவேயில்லை.

மறைக்கப்பட்ட வாண்டையத்தேவனின் வரலாற்றைத்தேடி பயணித்து விகடன் குழு தயாரித்துள்ள ஆவணப்படம் கீழே!