Published:Updated:

வகுப்பறை கட்டியதில் 2,000 கோடி ஊழல் - அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாயும் பா.ஜ.க!

வகுப்பறை கட்டுவதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா 2 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளாகப் புகார் எழுந்துள்ளது. 

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

பா.ஜ.கவைச் சேர்ந்த மனோஜ் திவாரி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ஊழல் நடந்துள்ளது. இதற்கான பெரும்பாலான ஒப்பந்தங்கள், ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு, 12,782 வகுப்பறைகள் கட்ட 2,892 கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளது.

பா.ஜ.க
பா.ஜ.க

இதை 800 கோடியிலே கட்டி முடித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் 2 ஆயிரம் கோடியில் அவர்கள் ஊழல் செய்துள்ளனர். நீங்கள் வீடு வாங்கச் சென்றால், ஸ்கோயர் 1500 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால் கெஜ்ரிவால் அரசு வகுப்பறையைக் கட்ட ஒரு ஸ்கோயர் ஃபீட்டுக்கு 8,800 ரூபாயைச் செலவு செய்துள்ளது.

நான் சேகரித்த தகவலின் படி 34 ஒப்பந்தக்காரர்கள் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள்தான். நாங்கள் இந்த விவகாரத்தை லோக்பாலுக்கு கொண்டு சென்று, அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மேலும், கல்வித்துறை வைத்துள்ள, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உடனடியாக பதவி விலக வேண்டும்” என்றார்.

மணிஷ் சிசோடியா
மணிஷ் சிசோடியா
Facebook

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.க வகுப்பறை ஊழலை கையிலெடுத்துள்ளது. டெல்லி அரசு வகுப்பறைகளை கட்டியதை பெரிய சாதனையாக முன்வைத்துள்ளது. ஆனால் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது.