
`நான் எப்பவுமே சுதந்திர மனுஷிதான். மருமகன் வந்துட்டாருன்னு அவர்கிட்டயும், அவர் குடும்பத்துகிட்டயும் கைக்கட்டியெல்லாம் என்னால நிக்க முடியாது.
மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலம் 4 பேருக்குப் பார்வை; எப்படி சாத்தியம்? விளக்கும் மருத்துவர்
``இறந்த நபர்களிடம் இரண்டு கருவிழியைத் தானம் பெற்று ஒரு கருவிழியை மேல் பாகம், கீழ் பாகம் என இரண்டாகப் பிரித்து இரண்டு பேருக்குப் பொருத்துவோம். அப்படியானால் ஒருவர் இரண்டு கண்களைத் தானம் செய்வது மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைக்கும். இந்த வகை கருவிழி மாற்று அறுவை சிகிச்சை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான்...''
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரிடம் தானம் பெற்ற இரண்டு கண்களின் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைக்கச் செய்தது எப்படி என விளக்கும் கண் மருத்துவரின் முழுமையான பேட்டியை https://bit.ly/3CO6GbW இந்த லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்.

என் அம்மாவுக்கும் கணவருக்குமான ஈகோ பிரச்னை; நிம்மதியிழந்த நான்... என்ன செய்ய? #PennDiary
`எல்லா மாமியாரும் மருமகன்னா எவ்ளோ மரியாதை கொடுக்குறாங்க..? ஆனா, உங்கம்மா என்னை ஏதோ கொடுக்கக்கூடாதவனுக்குப் பொண்ணைக் கொடுத்துட்ட மாதிரி பார்க்குறாங்க' என்கிறார் கணவர். `நான் எப்பவுமே சுதந்திர மனுஷிதான். மருமகன் வந்துட்டாருன்னு அவர்கிட்டயும், அவர் குடும்பத்துகிட்டயும் கைக்கட்டியெல்லாம் என்னால நிக்க முடியாது. குடும்பப் பொறுப்பு, அன்புனு எல்லாம் சொல்லி உன்னை அடிமைப்படுத்த நீயும் அனுமதிக்காத' என்கிறார் அம்மா. இவர்களுக்கு இடையில் வளர்ந்துகொண்டே இருக்கும் ஈகோ பிரச்னையில் என் நிம்மதி சுத்தமாகத் தொலைந்துவிட்டது.
அம்மாவுக்கும் கணவருக்குமான ஈகோ பிரச்னையில் நிம்மதியிழந்த வாசகியின் சிக்கலையும் வாசகர்களின் பரிந்துரைகளையும் https://bit.ly/3wcc0TQ இந்த லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்.