ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் ONLINE

அவள் ONLINE
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் ONLINE

`சம்பாதிக்கவும் புகழ்பெறவும் எந்த ரூட்ல வேணா போகலாம்... தப்பில்ல!’ என்ற மனநிலையில்...

அவள் ONLINE

மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

இந்தக் காலத்திலும் `அன்னபூரணிகள்’ உருவாவது எப்படி? - விளக்கும் மனநல மருத்துவர் ஷாலினி

`சம்பாதிக்கவும் புகழ்பெறவும் எந்த ரூட்ல வேணா போகலாம்... தப்பில்ல!’ என்ற மனநிலையில் குற்றம் செய்யத் துணிந்தவர்களின் பிரதான தேர்வாக ஆன்மிகத்துறை மாறியிருப்பது பெரிய துரதிர்ஷ்டம். அத்தகைய முடிவெடுத்தவர்கள், அதிக கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கும் அப்பாவி மக்களைத்தான் முதலில் தங்கள் பக்கம் இழுக்க நினைப்பார்கள். தங்களுக்குச் சிறப்பு வாய்ந்த ஆற்றல் / சக்தி இருப்பது போல, வித்தியாசமான ஒலியில் கூச்சல் இடுவது, நடனமாடுவது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, கையில் விபூதி வரவைப்பது போன்று மக்களை ஏமாறச் செய்யும் வகையில் புதுப்புது யுக்திகளைக் கையாள்வார்கள்.

கடந்த சில தினங்களாக இணையத்தில் டிரெண்டாகியுள்ள அன்னபூரணி போன்ற போலிச் சாமியார்களிடமிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள மனநல மருத்துவர் ஷாலினி தரும் தகவல்களை https://bit.ly/3pEOcX8 லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்.

அவள் ONLINE

என் பையன் `நோ’ சொல்லியிருந்தா நானும் மறுத்திருப்பேன்; ஆனா... `கம்பேக்' பற்றி ஸ்ரீலேகா

`` `நான் நடிக்கிறது வயசான அம்மா ரோல். டிவி-யில நான் வரும்போது எனக்கு நரை முடி அதிகமா இருக்கும். சீரியல்ல என்னை பாட்டினுகூட சிலர் கூப்பிடுவாங்க. அதைப் பார்க்கும்போது நீ ஏத்துப்பியா... நான் நடிக்கட்டுமா?’ன்னு என் பையன் ஆருஷ்கிட்ட கேட்டேன். கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, `எனக்கு எந்த வருத்தமும் இல்ல. உன்ன எப்படிப் பார்த்தாலும் எனக்கு சந்தோஷம்தான். டிவி-யில உன் நடிப்பைப் பார்க்க ஆவலா இருக்கேன்மா’னு சிரிச்சுகிட்டே சொன்னான். சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கி சில தினங்கள்தான் ஆகுது. அந்த எபிசோடுகளைப் பார்த்துட்டு என் பையன் பாசிட்டிவ் ஃபீட்பேக் கொடுத்தான்...”

`கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?’, `திம்சுகட்ட...’ போன்ற ஹிட் பாடல்கள் பலவற்றைப் பாடிய பின்னணிப் பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி, முழுநேர நடிகையாகி யிருக்கிறார். அவரின் விரிவான பேட்டியை https://bit.ly/3FKbJvo லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்.