ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் பதில்கள் 57: வெயிட்லாஸுக்கு பிறகு பொருந்தாத உடைகள்... ஆல்டர் செய்து அணிவது சாத்தியமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

- சாஹா

குழந்தைகளுக்கு டயாப்பர் உபயோகிப்பதால் ஏற்படும் சரும பாதிப்புக்கு என்ன காரணம்? இன்றைய காலத்தில் டயாப்பர் உபயோகத்தைத் தவிர்க்க முடிவ தில்லை. இந்த நிலையில் டயாப்பர் அணிவிப்பதற்கு முன்பும் அதை அகற்றிய பிறகும் செய்ய வேண்டியவை என்னென்ன?

- எம்.சந்தியா, புதுக்கோட்டை

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்

சரியாகப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் குழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது பாதுகாப் பானதுதான். தேவைக்கேற்ப, தரமான நிறுவனத் தயாரிப்பாகப் பார்த்து வாங்கவும். வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுக்கு சுத்தமான காட்டன் துணியால் செய்யப்பட்ட டயாப்பரை அணிவிக்க லாம். குழந்தை சிறுநீர், மலம் கழித்துவிட்டாலோ அல்லது டயாப்பர் அணிவித்து 2-3 மணி நேரம் ஆகி விட்டாலோ அதை மாற்றிவிடலாம். இரவு நேரத்தைப் பொறுத்தவரை ஈரப்பதத்தை நன்கு உறிஞ்சக்கூடிய டயாப்பரை குழந்தைக்கு அணி விப்பது அதன் தூக்கத்தை பாதிக்காமல் இருக்கும்.

அவள் பதில்கள் 57: வெயிட்லாஸுக்கு பிறகு பொருந்தாத உடைகள்... ஆல்டர்  செய்து  அணிவது  சாத்தியமா?

குழந்தையின் சருமம் மிக மென்மையானது. டயாப்பர் அணிவிக்கும்போது அது குழந்தையின் சருமத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பதால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே ஒவ்வொரு முறை குழந்தைக்கு டயாப்பர் அணி விக்கும் முன்பும், அதன் சருமத்தில் ஏதேனும் அலர்ஜியோ, புண்ணோ இருக்கிறதா என கவனிக்க வேண்டும். கடைகளில் `நாப்பி க்ரீம்' என கிடைக் கும். டயாப்பரை அகற்றியதும் குழந்தையின் உடலை தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு காட்டன் துணியால் துடைத்துவிட்டு, இந்த நாப்பி க்ரீம் அல்லது மாய்ஸ்ச்சரைசர் தடவலாம். குழந்தை சிறுநீர், மலம் கழிக்காவிட்டாலும் 2-3 மணி நேரத்துக்கொருமுறை டயாப்பரை மாற்றினால், அது குழந்தையின் சருமத்தை பாதிக்காமலிருக்கும்.

டயாப்பரை அகற்றியதும் குழந்தையின் சருமம் சில நிமிடங்கள் சுவாசிக்கும்படி காற்றோட்டமாக விடவும். ஒரு டயாப்பரை அகற்றியதும் உடனே அடுத்ததை மாற்றத் தேவையில்லை.

அவள் பதில்கள் 57: வெயிட்லாஸுக்கு பிறகு பொருந்தாத உடைகள்... ஆல்டர்  செய்து  அணிவது  சாத்தியமா?

சில வருடங்களுக்கு முன் நான் மிகவும் பருமனாக இருந்தேன். இப்போது சுமார் 12 கிலோ குறைத்திருக் கிறேன். பருமனாக இருந்தபோது அந்த உடல்வாகுக்கு ஏற்ப தைத்த ஜாக்கெட், சல்வார் போன்றவை இப்போது எனக்குப் பொருந்தவில்லை. அவற்றை வீணாக்கவும் மனதில்லை. அந்த உடைகளை ஆல்டர் செய்தால் ஃபிட்டிங் மாறும் என்கிறார்கள். அவ்வளவு காசு கொடுத்து வாங்கியவற்றை என்ன செய்வது?

-ஷில்பா, கோவை

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் ஃபேஷன் கன்சல்ட்டன்ட் தனம்

எடையைக் குறைத்து ஃபிட் ஆனதற்கு வாழ்த்துகள். உங்களு டைய பழைய உடைகளை தாராள மாக இப்போதைய உடல்வாகுக்கு ஏற்றபடி ஆல்டர் செய்து அணிய முடியும். ஜாக்கெட்டோ, சல்வாரோ.... எந்த உடையானாலும் அதில் போதுமான துணி மிச்ச மிருக்கும். ஆல்ட்ரேஷன் வேலைப்பாடுகள் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், செய்ய முடியாது என்றில்லை.

அவள் பதில்கள் 57: வெயிட்லாஸுக்கு பிறகு பொருந்தாத உடைகள்... ஆல்டர்  செய்து  அணிவது  சாத்தியமா?

நல்ல டெய்லரை கண்டுபிடியுங்கள். உங்களுடைய விருப்ப உடைகளைக் கொடுத்து மொத்த தையலையும் பிரிக்கச் சொல்லுங்கள். பிறகு அந்தத் துணியை அயர்ன் செய்ய வேண்டும். இப்போதைய உடல்வாகுக்கு ஏற்ப அளவெடுத்து மீண்டும் தைக்கச் சொல்லுங்கள். மாற்ற முடியாத ஒரே விஷயம் கழுத்தின் ஆழம். கழுத்தின் அளவானது எப்போதுமே உயரத்துக்கேற்பதான் வைக்கப்படுமே தவிர, உடல் பருமனுக்கேற்ப வைக்கப்படுவதில்லை. அதுவே ஒல்லியாக இருந்த ஒருவர், திடீரென எடைகூடி, பழைய உடைகளை அந்த உடல்வாகுக்கு ஏற்ப மாற்ற முடியுமா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை. பழைய உடைகளைப் பிரித்தாலும் உள்ளே துணி இருக்காது. அதை எடைகூடிய உங்கள் உடல் வாகுக்கு ஏற்ப மாற்ற முடியாது. அத்தகைய உடைகளை உறவினர்கள், நண்பர்கள் அல்லது தேவையுள்ள வறியவர்களுக்கு உடனடியாக கொடுத்துவிடுவதுதான் நல்லது. பெட்டியிலும் பீரோவிலும் அடுக்கிவைத்திருப்பதால் யாருக்குமே பிரயோஜனமில்லை.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.