
யாதும் ஊரே... யாவரும் கேளிர்!
சிறப்புப் பரிசு பெறும் வாசகி
`அது, இது, எதுவானாலும் சரி... அவள் விகடன் இதழில், இணையதளத்தில், யூடியூபில் இடம்பெற வேண்டும் என நீங்கள் நினைப்பவற்றை பற்றி, உரிமையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேர்வு பெறும் சிறந்த ஆலோசனைகளுக்கு சிறப்புப் பரிசுகள் நிச்சயம்' என்று அறிவித்திருந்தோம்.
அயல்நாட்டு வாசகர்கள் பற்றியும், அங்குள்ள தமிழ்க் குடும்பங்களின் வாழ்வியல் குறித்த கட்டுரைகளையும் அவள் விகடன் இதழில் எதிர் பார்ப்பதாக எழுதியிருந்தார், நம் சென்னை வாசகி சுந்தரி காந்தி. இதழுக்கான இந்த ஆலோசனைக்காக சிறப்புப் பரிசு பெறுகிறார்.
வெளிநாடுகளில் வாழும் அவள் விகடன் வாசகர்கள், அங்கு தங்கள் வேலை, தொழில், வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, அரசியல், ரிலேஷன் ஷிப் குறித்த கட்டுரைகளை எங்களுக்கு எழுதி அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படுபவை இதழில் பிரசுரிக்கப்படும். பரிசும் உண்டு.

அனுப்ப வேண்டிய முகவரி:
யாதும் ஊரே... யாவரும் கேளிர்!
அவள் விகடன்,757, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
மின்னஞ்சல் முகவரி:
avalvikatan@vikatan.com