லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

பள்ளிப் பேருந்து ஓட்டையில் விழுந்து கொல்லப்பட்ட குழந்தை ஸ்ருதி... தீர்ப்பில் நீதி எங்கே?

பள்ளிப் பேருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
பள்ளிப் பேருந்து

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

பள்ளிப்பேருந்திலிருந்த ஓட்டையின் வழியே கீழே விழுந்ததால் கொல்லப்பட்ட 7 வயதுக் குழந்தை ஸ்ருதியை மறக்க முடியாது. 11 ஆண்டுகள் கழித்து, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இப்போது அவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. பேருந்து ஓட்டையில் அட்டையை வைத்து மறைத்ததால் பரிதாபமாக குழந்தையின் உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பள்ளியின் தாளாளர், பேருந்துக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட எட்டு பேரையும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். எனில், ஸ்ருதியின் கொலைக்கு யார்தான் காரணம்? இந்தத் தீர்ப்பு குறித்தும், இதுபோன்ற தீர்ப்புகள் குறித்துமான வாசகர்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளச் சொல்லி அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். அவற்றில் சிறந்தவை இங்கே...

kovai.shiva

குற்றவாளிகளை தண்டிப்பதற்குத்தான் சட்டம். ஆனால், சட்டத்தின் ஓட்டைகள் வழியே குற்றவாளிகள் தப்பிப்பதையே அதிகம் பார்க்கிறோம். அதுபோன்ற தீர்ப்புகள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்கின்றன.

sriramanramamoorthi

ஒரு குழந்தையைக் கொன்ற, மாநிலம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட முக்கிய மான வழக்கின் இந்தத் தீர்ப்பு மீடியா முதல் செயற்பாட்டாளர்கள் வரை அனைவராலும் கவனிக்கப்படும் என்ற நிலையிலேயே இதுதான் நீதி என்றால், எளிய மக்களின் சட்டப் போராட்டங்களில் எல்லாம் நீதியை எவ்வாறு நம்புவது?

civmuttlllku4

இந்திய அரசியலமைப்பு சட்டம், உலகின் மிக நீண்டதாக எழுதப்பட்டது என்ற பெருமைக்கு உரியது. சட்டத்தின் வலிமையை பல வழக்குகளில் உணர்ந்துள்ளோம், நீதி கிடைக்கப்பெற்றுள்ளோம். ஆனால் இன் னொரு பக்கம் அதே சட்டத்தால் குற்ற வாளிகள் நிரபராதிகளாகத் தீர்ப்பளிக்கப் படும் வழக்குகளையும் பார்க்க நேர்கிறது. தவறு சட்டத்தில் இல்லை, சட்டத்தை கையாள்பவர்களிடம்தான்.

revathi.reva94

இரு தனி நபர்களுக்கு இடைப்பட்ட வழக்குகளில் முன் பகை, சாட்சிகள், விசாரணைகள் உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் அறிய வாய்ப்பில்லை. ஆனால், குழந்தை ஸ்ருதியின் வழக்குபோல பொது மக்களின் உயிர் அலட்சியத்தால் அநியாயமாக பலியாகும் வழக்குகளில் என்ன நடந்தது என்பது கண்ணாடி போல தெள்ளத் தெளிவு என்ற நிலையிலும், தீர்ப்பு குற்றம் சுமத்தப் பட்டவர்களுக்கு சாதகமாக வருகிறது. எனில், அவ்வாறு பறிபோன உயிர்களுக்கு யார்தான் காரணம்? யாரைதான் தண்டிப்பது?

பள்ளிப் பேருந்து ஓட்டையில் விழுந்து கொல்லப்பட்ட குழந்தை ஸ்ருதி... தீர்ப்பில் நீதி எங்கே?

limitless_travelfreak

இந்தத் தீர்ப்பு, குழந்தையின் மரணத்தை விட துயரமானது.

Viswanathan Mathan

இந்த வழக்கு 11 ஆண்டுகளாகத் தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது என்பதே தாமதிக்கப்பட்ட நீதி என்றாகிறது. தீர்ப்பு வந்த பின்பு நீதி எங்கே என்றாகியிருக்கிறது. இதுபோன்ற வழக்குகளில் வாய்தாவுக்கு மேல் வாய்தா வழங்க வேண்டிய தேவையென்ன?

ஊரறிந்த குற்றவாளிகள் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு தட்டிக்கொடுத்து அனுப்பிவைக்கப்படும் வழக்குகளில், அவர்கள் சாமான்யர்களாக இருக்கிறார்களா, அதிகார, பண பின்புலத்துடன் இருக்கிற வர்களா என்று பார்த்தால், பதில் புரியும்.

சின்ன கனி

சமீபகாலமாக உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகள், தீர்ப்பில் குறிப்பிட்ட கருத்துகள் பல விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன.

சட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையிலான தீர்ப்புகளுக்கு உரிய கண் டனங்கள் கொடுக்கப்பட வேண்டும். நாட்டின் முக்கியத் துறையான நீதித்துறை சீர்படுத்தப்பட வேண்டி இருக்கிறது என்பது கண்கூடு.