
#Avaludan
இந்தியாவில் 13 - 18 வயதுக் குழந்தைகளுக்கு கோவிட் - 19 தடுப்பூசி கோவாக்ஸின் (Covaxin), ஜனவரி 3-ம் தேதியில் இருந்து செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பற்றிய வாசகர் களின் கருத்துகளை அவள் விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ் டேக்குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சில இங்கே...
Mahalakshmi Subramanian: எந்த நோய்க்கும் தடுப்பூசி என்ற முதல் கட்டத்தையும், சிகிச்சை என்ற அடுத்த கட்டத்தையும் அடைந்தால்தான் நிரந்தர நிவாரணம் கிடைக்கும். ஆனால், கோவிட் - 19 தொற்றை பொறுத்தவரை தடுப்பூசிக்குப் பிறகான சிகிச்சை செயல் பாடுகள் ஆராய்ச்சி அளவிலேயே இருக்கின்றன. எனவே, இப்போது தடுப்பூசியே நம்மை பாதுகாக்க வழி. பல யூகங்கள், வதந்திகள் வந்தாலும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு. இனிவரும் காலம் குழந்தைகள் கையில்தான் என்பதால் அவர்களின் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது.
யமுனா தேவி: குழந்தைகளுக்குக் கொரோனா நோய்த் தொற்று ஏற்படும் சதவிகிதம் மிக மிகக் குறைவே. ஏற்பட்டாலும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசியின் அவசியம் என்ன?
Radhika Ravindrran: வரவேற்கத்தக்க ஒன்று. குழந்தை பிறந்த பின் அதற்கு எத்தனையோ தடுப்பூசிகள் போடுவதைப்போல் இதையும் போட வேண்டும். இதுவரை குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வில்லையென்றாலும், அவர்கள் மூலம் பெரியவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது. தடுப்பூசி செலுத்திய பின் குழந்தை களை தைரியமாக பள்ளிக்கு அனுப்பலாம்.
BanuMiss Svm: ஆரம்பத்தில் பெரியவர்களுக்குத் தடுப்பூசி போட ஆரம்பித்தபோதும், ‘அவசியமா?’ என்ற விவாதம் வந்தது. ஆனால், தடுப்பூசி கொடுத்த தைரியத்தால்தான் மக்கள் கொரோனா கால கட்டத்தில் தைரியத்துடன் வாழ்க்கையை எதிர் கொள்ள ஆரம்பித்தார்கள். அதுபோல, இப்போது குழந்தைகளுக்குத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்போதும் சலசலப்புகள் எழுகின்றன. குழந்தைகள் பாதுகாப்புடன் பள்ளிக்குச் சென்றுவர கோவிட் தடுப்பூசி அவசியம்.
Shahul Hameed: அமெரிக்கா, ஃபிரான்ஸ், இத்தாலி, போலந்து, சிங்கப்பூர்னு பல வெளிநாடுகள்ல ஏற்கெனவே பதின்வயதுக் குழந்தைகளுக்குத் கோவிட் தடுப்பூசி போட ஆரம்பிச்சுட்டாங்க. நம் பிள்ளைகளோட ஆரோக்கியம் நமக்கு முக்கியம். இனி இந்த உயிர்க்கொல்லி நோயோட தான் மனித வாழ்வு பயணிக்கணும்னா, தடுப்பூசி அவசியம்.

Dharani Uthraswamy: குழந்தைகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், தீவிர விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதையே பார்த்து வந்தோம். மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது, அவர் களால் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது என்பதே உண்மை. எனவே, குழந்தைகளுக்குத் தடுப்பூசிக்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதற்கான சப்ளிமென்ட்களை வழங்கலாம்.
Valli Subbiah: பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தான் தடுப்பூசி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது. 13 - 18 வயது என்பது குழந்தைகள் கல்வியில் முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் வயது. தடுப்பூசி மூலம் சரியான பாதுகாப்பு அளித்து அவர்களை கல்வி நிலையங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இப்போதைக்கு கொரோனா உலகில் இருந்து அகலும் சாத்தியம் தெரிய வில்லை. எனவே குழந்தை களுக்கு இரட்டிப்பு கவனத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.