ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சிங்கிளாக இருக்க விரும்பும் பெண்கள்... ஏன், எதற்கு?

Avaludan
பிரீமியம் ஸ்டோரி
News
Avaludan

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

`பம்பிள்' (Bumple) என்ற டேட்டிங் செயலி, இந்தியா முழுவதும் உள்ள, டேட்டிங்கில் ஆர்வமுள்ளவர்களிடம் எடுத்த சர்வேயில், 81% பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருப்பது சௌகர்யமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். `திருமணம் மற்றும் ரிலேஷன்ஷிப்பில் பெண்களின் மனநிலை மாறிவருகிறது’, `பொருளாதார சுதந்திரமும் சுயசார்பும் ஆணாதிக்கக் கட்டுகளிலிருந்து விடுபட அவர்களுக்கு வெளி கொடுக்கிறது’, ‘பெண் களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பாக குடும்ப அமைப்பே உள்ளது’ - இப்படி பல கருத்துகள் முன்வைக்கப்படும் நிலையில், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சிங்கிளாக இருக்க விரும்பும் பெண்கள்... ஏன், எதற்கு?

mathima_v

சிங்கிளாக இருந்தாலும், ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் பொருளாதார சார்பற்ற வாழ்க்கையை விரும்புகின்றனர். அதற்குத் துணையாக இருப்போம்.

zarazynn

ஓர் உறவோ, அந்த இணையோ தோழமையுடன் இல்லை யென்றால், அதன் தேவை என்ன? நான் உட்பட, பல ஹோம் மேக்கர்கள் ஒரு வித்தியாச பிரச்னையை உணர் கிறோம். நாங்கள் சுமை என்றும், எங்கள் தேவைகள் விரும்பத்தகாத ஆடம்பரம் என்றும் ஓர் எண்ணம் எங்களுடனேயே ஒட்டிவைக்கப் படுகிறது. அப்போது லைஃப் பார்ட்னர், பெட்டர் ஹாஃப் எல்லாம் அர்த்தம் இழக்கின்றன. சிங்கிளாக இருக்கும் பெண்கள் சந்தோஷ மாக இருப்பதாகத் தோணுகிறது.

aparnaayachitula

பெருகும் குடும்ப வன்முறை, விவாக ரத்து தரவுகள் எல்லாம் சிங்கிளாக இருப்பதன் சாதகங்களை பெண் களை யோசிக்க வைக்கிறது. அனுசரித்துச் செல்லும் பெண்களையே பார்த்துப் பழகிய சமூகம் இது. மேலும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப் படும் பெண்களை `இதெல்லாம் ஒரு பிரச்னையா, யார் வீட்டுல இல்ல’ என்று கடக்கும் நம் மக்கள், ‘அதுக்குத்தான் சொல்றோம், சிங்கிளாவே இருந்துக்குறோம்’ என்று பெண்கள் சொல்லும்போது மட்டும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறது.

Seka R

நாட்டில் பெருகிவரும் பெண்களுக்கு எதிரான குற்றங் களை எல்லாம் பார்க்கும்போது, அவர்களுக்கான பாது காப்பை குடும்ப அமைப்பே தரவல்லது என்று தோணு கிறது. குடும்பங்களிலேயே பெண்கள் வன்முறைக்கு உள்ளாவதை மறுப்பதற்கில்லை. என்றாலும், துணை இல்லாத பெண்ணின் வாழ்வில் பாதுகாப்பு இன்னும் பலவீனமாகலாம்.

pooji_kumar91

ஆணோ, பெண்ணோ... இருவருக்குமே தங்கள் ஆற்றல் களை சமன் செய்ய துணை தேவை. பெரும்பாலும் துணை இல்லாமல் நீண்ட நாள் வாழ முடியாது. ஆரோக்கியமான உறவுகளும் நம்முன்னே உள்ளன. பாசிட்டிவ்வாக நினைப்போம்.

Naz M

நல்ல துணைக்கான தேடலில் நம்பிக்கை வையுங்கள். அப்படி ஒருவர் கிடைக்கும் வாய்ப்பிருக்கும்பட்சத்தில் ஏன் இந்த வாழ்வை தனிமையில் நகர்த்த வேண்டும்?

Rohini Muthuraman

நான் நிறைய பயணம் செய்திருக்கிறேன். அப்போது சந்திக்கும் மேற்கத்திய பயணிகளில் பலர் வயதான, பணக்கார சிங்கிள்கள்தான். அவர்கள் வாழ்க்கை ஒரு கேளிக்கை போல் தோன்றும். உண்மையில் அவர்கள் தனிமையுடனும், மனஅழுத்தத்துடனும் போராடிக் கொண்டிருப்பவர்கள். வயோதிகத்தில் தனிமை என்பது துயரமானது. எனவே, தவறான கோட்பாடுகளால் வழி நடத்தப்படாதீர்கள்.

Ajee Ajeese

இது டேட்டிங்கில் ஆர்வமுள்ளவர்கள் தந்த தரவு. என்றாலும், இந்த சர்வே முடிவுக்கு லைக்ஸ், கமென்ட்ஸ் போட்டு ஷேர் செய்பவர்களும் அந்த மனநிலையின் பிரதிநிதிகளாகவே உள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இன்று ஒன் நைட் ஸ்டாண்ட் (one-night stand) முதல் ஃப்ரெண்ட் வித் பெனிஃபிட்ஸ் வரை (friend with benefits) பல வகை ரிலேஷன்ஷிப்கள் உள்ளன. ஆனால், நீண்டகால கமிட்டட் உறவே சிறந்தது. ஆணோ பெண்ணோ... துணையில்லாமல் வாழ்வது பரிந்துரைக்கத் தக்கதல்ல.

சிங்கிளாக இருக்க விரும்பும் பெண்கள்... ஏன், எதற்கு?

arunvinai1

சிங்கிள், ரிலேஷன்ஷிப்... எல்லாமே சூழலை பொறுத்து முடிவெடுக்கப்பட வேண்டும். ஓர் உறவில் மகிழ்ச்சியைவிட துன்பங்களே அதிகம் எனில் அதிலிருந்து வெளியேறி சிங்கிள் ஆகலாம். சிங்கிளாக இருக்கும் ஒருவருக்கு, வாழ்க்கை ஆகச்சிறந்த துணையைக் கொண்டுவந்து சேர்க்கும்போது கமிட் ஆகலாம். எனவே, சூழலால் விளையும் முடிவே இங்கு எதிலும், எப்போதும் இறுதி யானது.