
#Avaludan
உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...
’தமிழகத்தில் குழந்தைகளிடையே காய்ச்சல் வெகு வாகப் பரவிவருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இது குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்...

Dana Vijayaraman
விடுமுறை நோய்க்குத் தீர்வாகாது, நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனே செயல்படுத்த வேண்டும். கொரோனா விடுமுறையால், கல்வி பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை. அதற்குள் இன்னுமொரு இடைவெளியா? கல்வி கட்டாயம் பாதிக்கப்படும். எனவே நோயைக் கட்டுப்படுத்த வழி தேடுவோம். பரவுதலை கட்டுக்குள் கொண்டு வர முயல்வோம்.
Sakthi Pandi
பரிசீலித்து விடுமுறை விடலாம். காய்ச்சல் தொற்று குழந் தைகளுக்கு மேலும் பரவாமல் தடுப்பதே முதல் கடமை.
Geetharani
ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமாவது விடுமுறை அளிக்கலாம்.
Janaki Paranthaman
விடுமுறை வேண்டாம். மாறாக, வகுப்புகளில் குழந்தை களை நன்கு இடைவெளி விட்டு உட்காரச் சொல்லலாம். தேர்வு நாள்களில் பரீட்சை நேரம் முடியவும் வீட்டிற்கு அனுப்பிவிடலாம். இதனால் பள்ளியில் இருக்கும் நேரம் குறையும். மேலும், காய்ச்சல் உள்ள குழந்தைகளை கண்டிப்பாக வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி, அவர் களுக்கு மறு தேர்வு வைக்கலாம்.
Valli Subbiah
எல்லா பள்ளிகளுக்கும், எல்லா இடங்களிலும் விடுமுறை விடுவதைவிட, காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களில், பாதிப்பை பொறுத்து முடிவெடுக்கலாம். மேலும், இது வழக்கமான காய்ச்சல் பாதிப்புதான், அபாயநிலை இல்லை என்பதால் விடுமுறைக்குத் தேவை இருக்கிறதா என்று ஆலோசிக்க வேண்டும்.
Natchimuthu Subramanium
விடுமுறை விட்டால் பரவல் தடுக்கப்பட்டுவிடுமா அல்லது பள்ளி செயல்பட்டுக்கொண்டே பரவலையும் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா? இவற்றின் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். நிர்வாக முடிவுகளை அறிவியல்பூர்வமாக சிந்தித்து, அதற்குரிய நிபுணர்களுடன் ஆலோசித்து எடுக்க வேண்டும்.
அமேசானில் பி.ஐ.எஸ் சான்று இல்லாத, தரமற்ற 2,265 பிரஷர் குக்கர்கள் விற்கப்பட்டதாக மத்திய நுகர்வோர் ஆணையம் தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் அந்நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், குக்கர்களை வாங்கியவர்களுக்கு பணத்தைத் திருப்பிக்கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஆடைகள் முதல் எலக்ட்ரானிக் சாத னங்கள் வரை, உங்கள் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தில் பொருள்கள் தரம ற்று இருந்தது, டெலிவரி அதிர்ச்சிகள், கேஷ் ரிட்டர்ன் உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.

Sathia Moorthi
நான் ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் விரும்பு வதில்லை. காரணம், அது நாம் இதுவரை நேரடியாக பொருள்கள் வாங்கி வந்த ஒரு சிறு, குறு வியாபாரியை பாதிக்குமே என்ற எண்ணம்தான். என்னை நம்பி, என் ஊரில் கடை போட்டிருக்கும் அவர்களிடம் பொருள் கள் வாங்குவதையே விரும்புகிறேன்.
Valli Subbiah
ஆடைகளைப் பொறுத்தவரை, நிறம், மெட்டீ ரியல், டிசைன் எல்லாம் நாம் போட்டோவில் பார்க்கும் ஆடைக்கும், டெலிவரியில் வரும் ஆடைக்கும் பெரும்பாலும் வேறுபட்டிருக் கிறது. நேரடியாகச் சென்று வாங்கும்போது, சைஸ் சரியில்லை, டிசைன் பொருந்த வில்லை என்றால் மீண்டும் சென்று மாற்றிக்கொள்ளலாம். ஆனால், ஆன் லைனில், ரிட்டர்ன் ஆப்ஷன்கள் எல்லாம் நம்மை அலைக்கழிக்கவே செய்கின்றன.
Vaira Bala
ஒன்றா, இரண்டா ஏமாற்றப்பட்ட அனுபவங் களை எடுத்துச் சொல்ல? வந்த பொருள் களை பலமுறை திருப்பி அனுப்பி அனுப்பி அலுத்துப்போய், கிட்டத்தட்ட ஆன்லைன் ஷாப்பிங்கையே கைவிடும் நிலைக்கு வந்து வெகுநாள்களா கின்றன.
Muthulekshmi Subbiah
நான் அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறேன். ஒரு பொருளை வாங்கும் முன்பு அதற்கான ரெவ்யூ, ரேட்டிங்கை எல்லாம் செக் செய்துவிட்டே ஆர்டர் செய்வேன். டெலிவரியிலும் ஏமாற்றம் இருக்காது.
Saraswathy Padmanaban
நான் ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்ப மாட்டேன். ஆனால், என் மகனுக்கு அது மிகவும் பிடிக்கும். கார்ப்பரேட் உலகின் பிடியில் வாழும் இளைய சமுதாயம் இனிவரும் காலங்களில் இன்னும் ஜோராக ஆன்லைன் வர்த்தகத்தை வளர்த்தெடுப்பார்கள். சிறு, குறு வியாபாரிகளும் தங்களை இதில் அப்டேட் செய்துகொண்டாலே பிழைக்க முடியும்.
Keerthi
ஆன்லைன் ஷாப்பிங்தான் வசதி, விலை குறைவு என்கின்றனர் பலர். சொல்லப்போனால், அது ஒரு ஃபேண்டஸி மனநிலையே. நல்ல பிராண்டு பொருள்கள் கடைகளில் ஆன்லைன் தளங்களை விட விலை குறைவாகக் கிடைக்கின்றன.