Published:Updated:

பேரூராட்சி கூட்டம்; பழங்குடியின பெண் கவுன்சிலருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்திய சக கவுன்சிலர்கள்!

வளைகாப்பு
News
வளைகாப்பு

கூட்டத்தின்போது, திடீரென எழுந்து சென்ற பெண் கவுன்சிலர்கள் சிலர், சப்ரைஸாக பழங்கள், பூ, இனிப்பு வகைகள், வளையல்கள் போன்றவற்றை தட்டு நிறையக் கொண்டு வந்து கவுன்சில் அரங்கை வளைகாப்பு மேடையாக மாற்றினர். கர்ப்பிணியான பழங்குடி கவுன்சிலர் ராதாவை அழைத்து வந்தனர்.

நீலகிரி குன்னூர் அருகில் இருக்கிறது உலிக்கல் பேரூராட்சி. இந்த பேரூராட்சியின் மாதாந்தர கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வார்டுகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கூட்டத்தின்போது, திடீரென எழுந்து சென்ற பெண் கவுன்சிலர்கள் சிலர், சப்ரைஸாக பழங்கள், பூ, இனிப்பு வகைகள், வளையல்கள் போன்றவற்றை தட்டு நிறையக் கொண்டு வந்து கவுன்சில் கூட்ட அரங்கை வளைகாப்பு மேடையாக மாற்றினர்.

வளைகாப்பு
வளைகாப்பு

கர்ப்பிணியான பழங்குடி கவுன்சிலர் ராதாவை அழைத்து வந்து கணவருடன் நாற்காலியில் அமரவைத்து வளைகாப்பு நடத்தி நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதை சற்றும் எதிர்பாராத கர்ப்பிணி ராதா மகிழ்ச்சியில் கண்கலங்கிப்போனார்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து தெரிவித்த உலிக்கல் பேரூராட்சி கவுன்சிலர்கள்,``பழங்குடியினத்தைச் சேர்ந்த, 16வது வார்டு கவுன்சிலரான ராதாவுக்கு வளைகாப்பு நடத்த நாங்கள் முடிவு செய்திருந்தோம். இக்கூட்டத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவரை மகிழ்வித்து வாழ்த்தினோம்" என்றனர்.