Published:Updated:

டெல்லியில் வங்கி ஏ.டி.எம். வேனை கடத்தி ரூ.5 கோடி கொள்ளை!

டெல்லியில் வங்கி ஏ.டி.எம். வேனை கடத்தி ரூ.5 கோடி கொள்ளை!
டெல்லியில் வங்கி ஏ.டி.எம். வேனை கடத்தி ரூ.5 கோடி கொள்ளை!
டெல்லியில் வங்கி ஏ.டி.எம். வேனை கடத்தி ரூ.5 கோடி கொள்ளை!

புதுடெல்லி: டெல்லியில் வங்கி ஏ.டி.எம். வேனை கடத்திச் சென்று,5 கோடி ரூபாய்  பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டெல்லியில் இன்று ஐசிஐசிஐ வங்கியின் ஏ.டி.எம்-ல் பணம் வைப்பதற்காக, வங்கியின்  வேன் டிபன்ஸ் காலனிக்கு வந்தது.அப்போது துப்பாக்க்யுடன் திடீரென அங்கு வந்த மர்ம  நபர்கள் வேனை வழிமறித்து, பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டனர்.

பின்னர் கொள்ளையர்கள் அதிலிருந்த ரூ.5 கோடி பணத்துடன் வேனை கடத்திச்  சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த வேனை தெற்கு டெல்லியில் உள்ள ஒரு இடத்தில்  நிறுத்திவிட்டு,பணத்துடன் வேறு வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர்.

##~~##
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  நிலையில்,கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாதுகாவலர்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.