Published:Updated:

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிப்பு!

வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிப்பு!
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிப்பு!
வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிப்பு!

சென்னை: வங்கி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் இன்று நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தினால் வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டன.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வங்கி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதாவை எதிர்த்து அகில இந்திய அளவிலான ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது. .

ஏடிஎம் சேவைகள்  பாதிக்கும்

சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இப்போராட்டத்தினால்  பண பரிவர்த்தனை,ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்கேற்கவில்லை

வேலை நிறுத்த போராட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட 19 வங்கிகளின் ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குழும வங்கிகளின் ஊழியர்கள் பங்கேற்கவில்லை. எனவே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகள் இயங்கும்.சில தனியார் வங்கிகளும் இயங்கின. .