Published:Updated:

தனியார் வங்கிகளில் கருப்பு பணம்: அம்பலப்படுத்திய ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்! (படங்கள்)

தனியார் வங்கிகளில் கருப்பு பணம்: அம்பலப்படுத்திய ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்! (படங்கள்)
தனியார் வங்கிகளில் கருப்பு பணம்: அம்பலப்படுத்திய ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்! (படங்கள்)

புதுடெல்லி: ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கிகள் வாடிக்கையாளர்களின் கருப்பு பணத்தை குறுக்கு வழியில் பயன்படுத்தி வந்துள்ளதை அனிருத்தா பெஹல் குழு அம்பலப்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தனியார் வங்கிகளில் கருப்பு பணம்: அம்பலப்படுத்திய ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்! (படங்கள்)

போலி ராணுவ ஆயுத பேர ஊழலை தெகல்ஹா பத்திரிகை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கருப்பு பணத்தை எப்படி தனியார் வங்கிகள் கருப்பு பண முதலைகளிடம் இருந்து சட்ட விரோதமாக வாங்குகின்றன என்பதை தெகல்ஹா தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
 

தனியார் வங்கிகளில் கருப்பு பணம்: அம்பலப்படுத்திய ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்! (படங்கள்)

தெகல்ஹா பத்திரிகையில் பணியாற்றியவரும் தற்போது கோப்ரா போஸ்ட் இணையதள பத்திரிகையை நடத்தி வருபவருமான அனிருத்தா பெஹல் தலைமையி்ல் செயல்பட்ட ஒரு குழு இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதற்கு, "ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்" என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆபரேஷன் குழு இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகள் சிலவற்றை கண்காணித்து வந்துள்ளது.
 

தனியார் வங்கிகளில் கருப்பு பணம்: அம்பலப்படுத்திய ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்! (படங்கள்)

தற்போது, வங்கிகளில் தனி நபர் ஒருவர் 49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் பான்கார்டு கண்டிப்பாக வேண்டும்.

ஆனால் சில முக்கிய நகரங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ, எச்.டி.எப்.சி., ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, பான்கார்டு இல்லாமலேயே 50 ஆயிரத்திற்கும் மேல் டெசிபாட் செய்ய வைத்துள்ளது இந்த ஆபரேஷனில் அம்பலமாகியிருக்கிறது.
 

தனியார் வங்கிகளில் கருப்பு பணம்: அம்பலப்படுத்திய ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்! (படங்கள்)

இந்த பணத்தை மெடிக்கல் இன்சூரன்ஸ், மிச்சுவல் பண்ட் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பணத்தை பயன்படுத்தி வருகிறது. இப்படி கருப்பு பணத்தை குறுக்கு வழிகளில் இந்த வங்கிகள் பயன்படுத்தி வந்துள்ளதை இந்த தெகல்ஹா குழு அம்பலப்படுத்தியுள்ளது.
 

தனியார் வங்கிகளில் கருப்பு பணம்: அம்பலப்படுத்திய ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்! (படங்கள்)

முதல் கட்டமாக டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் இந்த குழு தனது ஆபரேஷனை தொடங்கி இருக்கிறது. இந்த குழுவினர் வீடியோவில் பதிவு செய்தவற்றை 3 மணி நேர ஆவணப்படமாக தயாரித்துள்ளது. இதனை தற்போது டெல்லியில் வெளியிட்டுள்ளது தெகல்ஹா.

"முன்பெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில்தான் கருப்பு பணத்தை பதுக்குவார்கள். தற்போது இந்தியாவிலேயே கருப்பு பணத்தை பதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தான் தற்போது நாங்கள் வெளி்ச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம்" என்கிறார் அனிருத்தா பெஹல்.

தெகல்ஹா அம்பலப்படுத்தியிருக்கும் இந்த பகீர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி& படங்கள்: சரோஜ் கண்பத்