Published:Updated:

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணப்பரிவர்த்தனை பாதிப்பு!

Vikatan Correspondent
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணப்பரிவர்த்தனை பாதிப்பு!
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணப்பரிவர்த்தனை பாதிப்பு!
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணப்பரிவர்த்தனை பாதிப்பு!

புதுடெல்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

25 சதவீத ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாள் பணி, ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை, வங்கி ஊழியர்கள் சங்கங்களுக்கும் மத்திய தொழிலாளர் நல ஆணையர் மித்ராவுக்கும் இடையில் டெல்லியில் 2 முறை நடந்தது. அந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.

அதன்படி இன்று பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம். சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.