Published:Updated:

தமிழ் தெரியாத 50% பேருக்குத் தமிழ்நாட்டில் வேலை... பொதுத்துறை வங்கிகளில் என்ன நடக்கிறது?

இந்தியன் வங்கி

``தமிழக இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி-க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்குக் கொடுப்பதில்லை.” - அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் கோ.கருணாநிதி

தமிழ் தெரியாத 50% பேருக்குத் தமிழ்நாட்டில் வேலை... பொதுத்துறை வங்கிகளில் என்ன நடக்கிறது?

``தமிழக இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி-க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்குக் கொடுப்பதில்லை.” - அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் கோ.கருணாநிதி

Published:Updated:
இந்தியன் வங்கி

நாட்டிலுள்ள அரசுப் பொதுவுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் பணியிடங்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) என்ற அமைப்பு, தேர்வு நடத்தி நிரப்பிவருகிறது. அதன்படி, மாநிலங்களிலுள்ள வங்கிகளில் பணியாற்றும் கிளார்க்குகள் மக்களுடன் நேரடித் தொடர்பு உள்ளதால், அப்பணியிடங்களுக்கு அந்த மாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட வேண்டும் என்ற விதிமுறை நீண்டகாலமாக இருந்துவருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டிலுள்ள அரசு வங்கிகளில் 2021-2022-ம் ஆண்டுக்கான கிளார்க் பணியிடங்களுக்கு அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

Exam | தேர்வு
Exam | தேர்வு

அதன்படி, பாங்க் ஆஃப் இந்தியா (21), கனரா வங்கி (90), இந்தியன் வங்கி (555), யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (147), பஞ்சாப் & சிந்த் வங்கி (5), யூகோ வங்கி (5) ஆகிய அரசு வங்கிகளில் மொத்தம் 843 கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட தமிழ் தெரியாத நபர்கள் பணிக்குச் சேர்ந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபகாலமாகத் தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளும், தமிழக அரசின் பணியிடங்களிலும் வெளி மாநிலத்தவர்கள் அதிகமாகச் சேர்ந்துவருவதாகத் தகவல் வெளியாகிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியன் ஆயில், சி.ஆர்.பி.எஃப்., அஞ்சல்துறை உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்துள்ள 200-க்கும் அதிகமான வட மாநிலத்தவர்கள், தமிழக தேர்வுத்துறையில் வழங்கியதுபோல போலியான மதிப்பெண் சான்றிதழை வழங்கி பணியில் சேர்ந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, தமிழக மின்சாரத்துறை உட்பட பல்வேறு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்கள் சேர்ந்திருப்பதாகச் சர்ச்சையானது. இந்நிலையில், தமிழ் தெரியாத 400-க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் கிளார்க் பணியிடங்களில் சேர்ந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
" அரசு வங்கிகளில் தமிழர்களின் உரிமை பறிபோவது இது முதன்முறையில்ல."
கோ.கருணாநிதி

இந்தப் பணியிடங்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது. மாநில மொழிகள் தெரிந்திருப்பது அவசியம் இல்லை என ஐபிபிஎஸ் புதிதாக அறிவித்திருப்பதே இதற்குக் காரணம். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் கோ.கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து கோ.கருணாநிதியிடம் கேட்டபோது, ``அரசு வங்கிகளில் தமிழர்களின் உரிமை பறிபோவது இது முதன்முறையல்ல" என்று தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ``2018-ம் ஆண்டு முதல் வங்கிகள் பணியிட நிரப்புதல் குறித்து ஆய்வு நடத்திவருகிறோம். கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அரசு வங்கிகளில் 1,277 கிளார்க் பணியிடங்கள் நிரப்பபட்டன. அவர்களில் 20 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளி மாநிலத்தவர்கள்தான். இது எப்படிச் சாத்தியமாயிற்று என்று ஆய்வு செய்தபோது, தமிழகத்திலுள்ள அரசு வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்குத் தமிழ் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் மாற்றம் குறித்து அமைச்சகத் தரப்பிலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் குறித்து அப்போதைய தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்தப் பயனுமில்லை. அப்போது பணியில் சேர்ந்த பலரும் இரண்டு ஆண்டுகள் நிறைவுசெய்து, தங்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகிவிட்டனர். இந்த விவகாரத்தை நாம் கண்டுகொள்ளாததால், தற்போது தமிழக வங்கிகளில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இது குறித்து முதல்வருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்" என்றார்.

`மாநில மொழி அவசியமில்லை என்றால், தமிழக இளைஞர்களுக்கும் பிற மாநிலங்களில் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்தானே..?’ என்று கேட்டபோது, "தமிழக இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி-க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்குக் கொடுப்பதில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்துவருகின்றனர். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் பாதிப்பில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிராந்திய மொழி பேசும் அனைவருக்கும்தான்.

கோ கருணாநிதி
கோ கருணாநிதி

தாய்மொழியில் இல்லாமல் வேறு மொழியில் தேர்வு எழுதுவதைக் கூடுதல் வாய்ப்பாகக் கருத முடியாது. வட மாநிலத்தவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் இந்தியில் தேர்வு எழுதலாம். அப்படியென்றால் அவர்களுக்கு மட்டும்தான் கூடுதல் வாய்ப்பு. பிராந்திய மொழி பேசும் நம்மைப் போன்றவர்களுக்கு இல்லை.

தமிழ் தெரியாமல் பணியில் சேரும் வெளி மாநிலத்தவர்களுக்கு மாநில மொழியைக் கற்றுக்கொள்ள மூன்று மாத அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் கற்றுக்கொள்ளவில்லையென்றால், கூடுதல் மூன்று மாதம் என நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மொழி தெரியவில்லை என்பதற்காக அவர்கள் நீக்கப்படுவதில்லை. மொழி தெரியாத வங்கி ஊழியர்களிடம் பேசுவதற்காகவே அவர்கள் மொழியை நாம் பேச வேண்டுமா? இதுவும் மறைமுக இந்தித் திணிப்புதான். இனி மொழி தெரியாமல் நமது கிராமப்புற மக்கள் திண்டாடப்போகிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே பிரச்னை தீரும்" என்றார் விரிவாக..

தமிழக அரசுத் துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 100 சதவிகிதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்ய ஏதுவாக, ஆணையிடப்பட்டிருப்பதைப்போல, தமிழகத்திலுள்ள வங்கிப் பணிகளைத் தமிழர்களுக்கு வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism