Election bannerElection banner
Published:Updated:

வங்கி அதிகாரிகள் ஸ்டிரைக் - ஏ.டி.எம்-களில் பணம் இருக்காது?

ATM
ATM

வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் இறங்குவதால், இந்த வார இறுதியில் ஏ.டி.எம்-களில் பணம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்டது. அதனால், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆகக் குறைந்தது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்கள் சங்கங்களும், வங்கி அதிகாரிகள் சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் சங்கங்கள் அப்போதே அறிவித்தன.

ATM
ATM

அதன்படி, இம்மாதம் 26, 27 (வரும் வியாழன் மற்றும் வெள்ளி) ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏ.ஐ.பி.ஓ.சி) உட்பட நான்கு அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தில், இந்தியா முழுவதும் சுமார் 40,000 வங்கி அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று வங்கி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் சுமார் ரூ.60,00 கோடி அளவுக்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்-மில் இருந்து வந்த கள்ள நோட்டுகள்!- மிரண்ட மின்வாரிய ஊழியர்

ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் பணி பெரும்பாலும் வங்கி அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறும். அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பப்படும் பணி பாதிக்கப்படும். ஆனாலும், புதன்கிழமையன்று ஏ.டி.எம்-மில் நிரப்பப்படும் பணம், வெள்ளிக்கிழமை காலை வரை போதுமான அளவில் இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

ATM
ATM

தமிழகத்தில் சுமார் 20,000 ஏ.டி.எம்-கள் உள்ளன. வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள்தான் வேலைநிறுத்தம் என்றாலும், வரும் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் இந்த வார இறுதி நாள்களில் ஏ.டி.எம்-களில் பணம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் 2.12 லட்சம் ஏ.டி.எம்-களில் சுமார் 48,000 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி அதிகாரிகளின் நான்கு சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

“இதற்குப் பெயர் வங்கி இணைப்பு அல்ல... வங்கிகளை மூடுதல்!”- வங்கி ஊழியர்கள் சங்கம்

தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் நவம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு