Published:Updated:

`இனி கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள்..!' - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

கடந்த ஆண்டில் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேட்டால் அந்த வங்கியின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும் பெரும்பாதிப்புக்குள்ளானார்கள்.

இந்தியாவிலுள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இதை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

இந்தியாவில் மொத்தம் 1,540 கூட்டுறவு வங்கிகள் இயங்கிவருகின்றன. இந்த வங்கிகளுக்கு சுமார் 8.6 கோடி வாடிக்கையாளர்களும் சுமார் 5 லட்சம் கோடி டெபாசிட்டுகளும் இருக்கின்றன. இனி இந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை விதிகளின்படி இயங்கத்தொடங்கும்.

கடந்த ஆண்டில் பஞ்சாப்- மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேட்டால் அந்த வங்கியின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும் பெரும்பாதிப்புக்குள்ளானார்கள். அவர்களது டெபாசிட்டுகளை மீட்டெடுப்பது இன்றுவரை போராட்டமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகளில், கூட்டுறவு வங்கிகளின்மீது சுமார் ரூ.220 கோடி மதிப்புக்கு ஆயிரம் புகார்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி
vikatan

இனி கூட்டுறவு வங்கிகளின் தலைமைச்செயல் அதிகாரி நியமனம் உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்படும். கூட்டுறவு வங்கியின் அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குக்கீழ் வரும்.

அடுத்த கட்டுரைக்கு