Published:Updated:

உலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்? #DoubtOfCommonMan

சர்வதேசச் சந்தையில் வட்டி விகிதம் குறைவாக உள்ளதால், உலக வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவு. ஆனால், அந்தக் கடனுதவியைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் கடினமாக இருக்கும். இதன்மூலம்தான் மற்ற நாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

உலக வங்கி
உலக வங்கி ( Vikatan Infographics )

உலக வங்கி இந்தியாவுக்கு நிதி உதவி... உலக வங்கியில் இந்தியாவின் கடன்... என்றெல்லாம் அடிக்கடி செய்திகளைப் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தலைமை வங்கி இருக்கிறது. இந்தியாவின் தலைமை வங்கி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா. அப்படியானால் உலக வங்கி என்பது என்ன?

Doubt of common man
Doubt of common man
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``உலக வங்கி எப்படி வேலை செய்கிறது. அதற்குத் தலைமை யார், அதற்கு நிதியை யார் அளிக்கிறார்கள்?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசகர் ஆர்.கௌதம்.
உலக வங்கி
உலக வங்கி

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோவிடம் கேட்டோம்.

``உலக வங்கியை இன்டர்நேஷனல் பேங்க் ஃபார் ரீகன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டெவலப்மென்ட் (International bank for reconstruction and development) என்ற பெயரில் 1944-ம் ஆண்டு உருவாக்கினார்கள். இதன்மூலம் சர்வதேச அளவில் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி உதவி அளிக்க வேண்டும் என்பது நோக்கமாகக் கூறப்பட்டது. வறுமை ஒழிப்பு, பருவநிலை மாறுபாடு, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றையும் கவனத்தில்கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது. உலக வங்கிக்கான மூலதனத்தில் பல நாடுகள் பங்களிப்பு செய்கின்றன. அதிகபட்ச பங்களிப்பை அமெரிக்கா செய்கிறது. எனவே, இதில் அமெரிக்காவின் கையே ஓங்கியிருக்கிறது. உலக வங்கி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் பெரும்பாலும் அமெரிக்காவின் திட்டத்தையே இது செயல்படுத்தும். அமெரிக்கா தவிர, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதில் முக்கிய பங்களிப்பு தருகின்றன.

சாலைப் பயன்பாட்டை சமூக நோக்கில் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, அதைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டுவந்த `பெருமை' உலக வங்கியையே சாரும்.
Doubt of common man
Doubt of common man

உலக வங்கி தொடங்கப்பட்டது முதலாகவே இந்தியாவும் இதில் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. ஆனால், இதில் நம்முடைய பங்களிப்பு குறைவு. உலக வங்கியிலிருந்து கடன் பெறும் நாடுகள், அதைத் திருப்பித்தர உத்தரவாதம் அளிப்பதால், கடனுதவி அளிப்பதும் திரும்பப்பெறுவதும் நன்முறையில் நடக்கிறது. உலக வங்கியில், மற்ற வங்கிகளைவிட அதிக நிதி மூலதனம் உள்ளது. சர்வதேசச் சந்தையில் வட்டி விகிதம் குறைவாக உள்ளதால், உலக வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவு. ஆனால், அந்தக் கடனுதவியைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் கடினமாக இருக்கும். இதன்மூலம்தான் மற்ற நாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். உலக வங்கி கடனுதவி கொடுப்பதன்மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரக் கொள்கையைக்கூட தீர்மானிக்கும் அளவுக்கு வலிமைவாய்ந்ததாக இருக்கிறது.

அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

கறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? #DoubtOfCommonMan
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ
vikatan
Doubt of common man
Doubt of common man

இந்தியாவில் தனியார்மயமாக்கத்தில் உலக வங்கியின் பங்களிப்பு பெரிது. இந்தியா என்றில்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் தனியார்மயமாக்கலுக்கு உலக வங்கி ஒரு காரணமாக இருக்கிறது. நம் நாட்டில் உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி வசூலிக்கும் முறை கொண்டுவரப்பட்டதற்கு உலக வங்கியின் கடனுதவியே காரணம். சாலைப்பயன்பாட்டை சமூக நோக்கில் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அதைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டுவந்த `பெருமை' உலக வங்கியையே சாரும்.

வெளிநாட்டு வங்கிகளையும் வெளிநாட்டு நிறுவனங்களையும் இந்தியாவுக்குள் கொண்டுவந்ததற்கு உலக வங்கியே முக்கிய காரணம். பிரான்ஸ், சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், தற்போது இந்தியாவில் வணிகம் செய்கின்றன.

ஜி-7 கூட்டம்
ஜி-7 கூட்டம்
Doubt of common man
Doubt of common man

ஜி-7 கூட்டத்தில், எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவருவது என்பது குறித்து பல்வேறு தீர்மானங்களைக் கொண்டுவருவார்கள். அதேபோல, உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டம் ஆண்டுதோறும் டாவோஸ் நகரில் நடைபெறும். இதில் உலகம் முழுவதுமுள்ள முன்னணி நிறுவன மேலாளர்கள், பெரிய வங்கிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரை அழைத்து கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறும். இதில் ஜி-7 கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.

உலக வங்கி - ஒரு பார்வை
உலக வங்கி - ஒரு பார்வை
Vikatan Infographics

கடந்த கலந்தாய்வுக்கூட்டத்தில், `இண்டஸ்ட்ரியல் ரெவெல்யூஷன் 4' என்ற தலைப்பில், அடுத்துவரும் காலங்களில் உலகத்தை ஆளக்கூடிய ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. இதன்மூலம் உலக நாடுகள், இத்தகைய தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும்போது உலக வங்கி கடனுதவி வழங்கும்.

சர்வதேச நாணய நிதியத்துக்கும் (International Monetary Fund) உலக வங்கிக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. 2008 பொருளாதாரப் பிரச்னைக்குப் பின், வங்கிகளைக் கட்டுப்படுத்துவதற்காக `ஃபைனான்சியல் ஸ்டெபிலிட்டி போர்டு' (FSB) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் உறுப்பினராக இருக்கின்றன. இதன்மூலமாகவும் உலக வங்கியின் கடனுதவி மற்ற நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்று ஒன்றுக்கொன்று தொடர்பின்மூலம்தான் உலக வங்கி செயல்பட்டு வருகிறது.

அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

உலக வங்கி தலைவர்
உலக வங்கி தலைவர்

தனியார் நிறுவனங்களின் உதவியோடு பல்வேறு திட்டங்களை உலக நாடுகளில் செயல்படுத்துவதும் உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்போது வலிந்து கடனுதவி தர முன்வருவதும் அதற்கான நிபந்தனைகளை விதிப்பதும் என மறைமுகமாக அமெரிக்காவின் ஆதிக்கம்தான் உலக வங்கியின்மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதன்மூலம் எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. ஓரளவு முன்னேற்றம் பெறுவதும், பின்னர் பொருளாதாரச் சரிவைச் சந்திப்பதுமாகத்தான் சுழற்சியாக இருக்கிறது" என்று கூறினார்.

Doubt of common man
Doubt of common man

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!