Published:Updated:

இந்தியாவில் தீவிர வறுமை நிலை குறைந்துள்ளது! - உலக வங்கி ஆய்வறிக்கை சொல்வதென்ன?

உலக வங்கி

உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் தீவிர வறுமை நிலை குறைந்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தீவிர வறுமை நிலை குறைந்துள்ளது! - உலக வங்கி ஆய்வறிக்கை சொல்வதென்ன?

உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் தீவிர வறுமை நிலை குறைந்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

Published:Updated:
உலக வங்கி

ஆய்வறிக்கை:

இந்தியாவின் வறுமை பற்றிய ஆய்வறிக்கையை மறு கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கி எனப்படும் உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதிகளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளை விடச் சிறிய அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அதிகளவு நிலம் வைத்துள்ளவர்களின் வருமானம் இரண்டு சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு 26.3 சதவிகிதமாக இருந்த கிராமப்புற வறுமை 2019-ம் ஆண்டில் 11.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நகர்ப்புற வறுமை 14.2 சதவிகிதத்திலிருந்து 6.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி
உலக வங்கி

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை 14.7% மற்றும் 7.9% குறைந்துள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களில் வறுமை அளவு குறைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு சமயத்தில் நகர்ப்புறங்களில் வறுமை இரண்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல, 2019-ம் ஆண்டு கிராமப்புறங்களில் வறுமை 10 அடிப்படை புள்ளிகள் உயர்ந்திருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் பேசினோம், ``இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது என்பதே உண்மை. கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டில் டி.வி., மிக்சி, கிரைண்டர், ஏ.சி., பிரிட்ஜ் என்று ஏதாவது ஒரு பொருளைப் பார்க்க முடியுமா? ஏதாவது ஒரு பெரும் பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே இந்த பொருள்களை எல்லாம் பார்க்க இயலும். ஆனால், இப்போது இந்த பொருள்களை எல்லாம் அனைவரின் வீட்டிலும் பார்க்க முடிகிறது தானே! முன்பு யாரவது ஒருவரின் வீட்டில் தான் தொலைப்பேசி இருக்கும். ஆனால், இன்று ஒரே வீட்டில் நான்கு அல்லது ஐந்து செல்போன்கள் இருப்பதை நம்மால் காண முடிகிறது தானே!" என்றார்.

பொருளாதார நிபுணர் நாகப்பன்
பொருளாதார நிபுணர் நாகப்பன்

தொடர்ந்து பேசியவர், ``இன்று பலரின் வீட்டில் பைக் இருக்கிறது, கார் இருக்கின்றது. சமீப காலங்களில் பணவீக்கத்தையும் தாண்டி மக்களின் வறுமை நிலை குறைந்துள்ளது என்பது தான் உண்மை நிலவரம். முன்பு ஒரு தனிநபரின் வருமானம் ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பெரும் நிறுவன முதலாளிகளின் வருமானம் இரண்டு ரூபாயிலிருந்து எட்டு ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த நான்கு மடங்கு உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வைதான் காணவேண்டும்" என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism