Published:Updated:

`4 வங்கிகள் குடையின் கீழ் இணைக்கப்படும் 10 பொதுத்துறை வங்கிகள்!' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கலிலுல்லா.ச

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

nirmala sitharaman
nirmala sitharaman

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளை மோடி தலைமயிலான மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. மேலும், வங்கிகளை இணைப்பது தொடர்பாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித் தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

finance minister
finance minister

பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, உள்ளிட்ட 10 வங்கித் தலைவர்கள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைகின்றன. இது நாட்டின் இரண்டாவது பொதுத்துறை வங்கியாக ரூ.17.95 லட்சம் கோடி மதிப்புடன் இருக்கும்.

அதேபோல கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. ரூ.15.20 லட்சம் கோடி மதிப்புடன் இது இருக்கும். இந்தியன் வங்கியுடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. நாட்டின் ஏழாவது பொதுத்துறை வங்கியாக ரூ.8.08 லட்சம் கோடி மதிப்புடன் இந்த வங்கி இருக்கும். மேலும், யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம் அந்த 10 பொதுத்துறை வங்கிகள் நான்காகக் குறைக்கப்பட்டுள்ளன” என்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தபோது, 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை, நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், 12 ஆக குறைகிறது.

`ராகுல் காந்தியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை!' - நிர்மலா சீதாராமன்
finance minister
finance minister

``வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; நாட்டில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்துடன் இயங்குகின்றன. வங்கிகளில் கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொத்துறை வங்கி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசின் தலையீடு இருக்காது. அரசின் நடவடிக்கையால் வங்கிகளில் வாராக்கடன் 7.90 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். ரூ.250 கோடிக்கு மேலான கடன்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.