Published:Updated:

கிராம வங்கிகள் தனியார்மயம்... என்ன சொல்கிறது மத்திய அரசு?

ஆ.பழனியப்பன்

கிராம வங்கிகளைத் தனியார்மயம் ஆக்கக்கூடாது என்று அதன் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், கிராம வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கி
வங்கி

நாடு முழுவதும் 56 பிராந்திய கிராம வங்கிகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் 95,000-க்கும் அதிகமானோர் பணிபுரிந்துவருகிறார்கள். இந்த வங்கிகள் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன.

கிராம வங்கி
கிராம வங்கி

இந்த வங்கிகளைத் தனியார்மயம் ஆக்கப்போகிறார்கள் என்ற சர்ச்சை நீண்டகாலமாக இருந்தது வந்தது. இதனால், கிராம வங்கி ஊழியர்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி-யான ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு, மத்திய இணை நிதி அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

கிராம வங்கி
கிராம வங்கி

அதில், ``பிராந்திய கிராம வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. மாநிலத்துக்குள்ளேயே இருக்கும் கிராம வங்கிகள் அனைத்தையும் இணைத்து, அதன்மூலம் அவற்றின் செலவைக் குறைக்கவும், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிசெய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசும் நிதி அளித்து அவற்றின் மூலதனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. கிராமப்புற வங்கிகளின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து அவற்றுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க தேசிய அளவிலான கூட்டங்களை நபார்டு வங்கியும், மாநில அளவிலான கூட்டங்களை அதிகாரம்பெற்ற குழுவும் நடத்துகின்றன” என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.