Election bannerElection banner
Published:Updated:

NPS பென்ஷன் திட்டத்தில் அதிகபட்ச வயது வரம்பை 70 ஆக உயர்த்த முடிவு... ஏன்?

என்.பி.எஸ் பென்ஷன்
என்.பி.எஸ் பென்ஷன்

அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பொதுமக்கள், தொழில்முனைவோர்கள் என அனைவரும் என்.பி.எஸ் திட்டத்தில் சேமிப்பதன் மூலம் ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெற முடியும்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ் - நேஷனல் பென்ஷன் சிஸ்டம்) கணக்கைத் திறப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பை, தற்போதிருக்கும் 65 வயதிலிருந்து 70 வயதாக உயர்த்த வேண்டும் என ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த வயது வரம்பானது 60 -லிருந்து 65-ஆக உயர்த்தப்பட்டது.

நேஷனல் பென்ஷன் சிஸ்டம் என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority - PFRDA) என்கிற அரசு சார்பு அமைப்பால் 2004-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தொழில்முனைவோர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தில் சேமிப்பதன் மூலம் ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெற முடியும்.

என்.பி.எஸ் பென்ஷன்
என்.பி.எஸ் பென்ஷன்

வயது வரம்பை அதிகரிப்பது குறித்து பேசிய, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பந்தோபாத்யா, ``என்.பி.எஸ் திட்டத்தின் அதிகபட்ச வரம்பை 60-லிருந்து 65-ஆக உயர்த்தப்பட்ட பிறகு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் 60 வயதுக்கு மேற்பட்ட 15,000 பேர் இதில் புதிய கணக்கை துவங்கியிருக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை மேலும் 5 ஆண்டுகள் அதிகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எங்களது கோரிக்கையை அரசு ஏற்கும்பட்சத்தில், ஒரு நபர் 60 வயதிற்குப் பிறகு என்.பி.எஸ்ஸில் சேர்ந்தால், அவர்கள் 75 வயது வரை கணக்கை இயக்க முடியும். இப்போதுள்ள விதி முறைப்படி 70 வயது வரைதான் கணக்கை வைத்திருக்க முடியும்.

Supratim Bandyopadhyay
Supratim Bandyopadhyay

தற்போதைய நிலையில் என்.பி.எஸ்-ன் கீழ், அனைத்து பிரிவுகளிலும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 31.72% உயர்ந்து 14.95 லட்சமாக அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் துறையில் இது 17.71% உயர்ந்து 10.90 லட்சமாக உள்ளது. ஜனவரி 31, 2021-ம் தேதி நிலவரப்படி, ஓய்வூதிய நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு 5,56,410 கோடி ரூபாயாக இருந்தது, இது ஆண்டு அடிப்படையில் 35.94% அதிகரித்துள்ளது. இதில் மத்திய அரசு ஊழியர்களின் பங்கு 1.38 லட்சம் கோடி ரூபாயாகவும் மாநில அரசு ஊழியர்களின் பங்கு 2.11 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. அரசு ஊழியர்களைத் தவிர, மொத்தம் 22.26 லட்சம் சாதாரண குடிமக்களும் என்.பி.எஸ்-சில் முதலீடு செய்துள்ளனர். இதில் 12.52 லட்சம் பேர் தனிப்பட்ட முறையிலும், கார்ப்பரேட் பிரிவுகளில் 9.74 லட்சம் ஊழியர்களும் இந்த திட்டத்தின் வரம்பிற்குள் வருகிறார்கள்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு