வங்கிக் கடன் நிலுவையில் உள்ள முதல் ஐம்பது பெருநிறுவனங்கள் பட்டியல் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு எந்த விளக்கமும் கிடைக்க வில்லை.

தொடர்ந்து, ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரான சாகேத் கோக்கேலே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கியிடம் மேற்கண்ட நிறுவனங்களின் பட்டியல் விவரங்களைக் கேட்டிருந்தார். அதில் கிடைத்த ‘68,000 கோடி ரூபாய் தள்ளுபடி’ விவரங்கள்தான் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன!

ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் பட்டியலின்படி அதிகபட்சமாக குஜராத்தின் கீதாஞ்சலி ஜெம்ஸ் குழுமத்தின் மெஹூல் சோக்ஸி வாங்கிய 5,492 கோடி ரூபாய் வாராக் கடன் அடிப்படையில் ரைட் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, ஆர்.ஈ.ஐ அக்ரோ நிறுவனத்தின் 4,314 கோடி ரூபாய், வின்சம் டைமண்ட்ஸ் குழுமத்தின் 4,076 கோடி ரூபாய் ரைட் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

கொரோனா பேரிடர் நெருக்கடியில் முறைசாரா தொழிலாளர்கள் தொடங்கி குறு, சிறு நிறுவனங்கள் வரை பொருளாதாரரீதியில் கடுமையாகத் தத்தளித்துவரும் நிலையில் 68,000 கோடி ரூபாய் ரைட் ஆஃப், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, “இது ரைட் ஆஃப் மட்டுமே... தள்ளுபடி அல்ல” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

ரைட் ஆஃப் என்பதும் தள்ளுபடியும் ஒன்றா? இதுகுறித்துப் பேசிய பொருளாதார வல்லுநர் ஜோதி சிவஞானம், “பெருநிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி, முதல் என எதையுமே திரும்பச் செலுத்தாத நிலையில் அது வாராக் கடனாக வைக்கப்படும். அதை திருப்பிச் செலுத்த 90 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும். அப்போதும் திருப்பிச் செலுத்தவில்லையெனில், அந்தக் கடனை ரைட் ஆஃப் செய்வதாக அறிவிக்கப்படும்.

இதுபோல் பெருநிறுவனங்கள் பல வங்கிகளிடமிருந்து பெற்ற 15 லட்சம் கோடி ரூபாய், தற்போது வாராக் கடனாகத்தான் உள்ளது. அது மொத்தமுமே இப்படி ரைட் ஆஃப் செய்யப்படலாம். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த வாராக் கடன் குறித்த பட்டியலை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அரசு அப்போது அதை அலட்சியப்படுத்தியது.

ரைட் ஆஃப் முறை மட்டுமல்ல, வாங்கிய கடனுக்குமேல் கூடுதல் பணம் கடனாகப் பெற்று அதைப் புதுக்கடனாகக் காண்பிப்பது (Ever green), நஷ்டத்தில் இருப்பதாகக் காண்பித்து தங்களால் இவ்வளவுதான் தர முடியும் என்று சொற்பப் பணத்தை வங்கிகளுக்குச் செலுத்தி ஏமாற்றுவது (Resolution), வாராக் கடனால் ஏற்படும் நஷ்டத்தை சரிக்கட்ட வங்கியே அதன் லாபத்தைக் கொடுப்பது (Provision) எனப் பல வகைகளில் இவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். அவற்றையும் சேர்த்தால் இந்த வாராக் கடன் தொகை இன்னும் அதிகமாகும்” என்றார்.

‘மே 17’ இயக்கத்தின் திருமுருகன் காந்தி, “கொடீசியா அமைப்பு, சமீபத்தில் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தது. அதில், இந்தியா முழுவதும் உள்ள குறு, சிறு தொழில்களுக்கான கடன், வரி, வட்டியில் சலுகை கேட்டிருந்தது. நாடு முழுவதுமே இத்தகைய கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்தியாவில் 90 சதவிகித உற்பத்தியாளர்கள் குறு, சிறு நிறுவனத்தினர்தான். பெருநிறுவனங் களுக்கான உதிரிபாகங்களை முழுவதுமாக உற்பத்தி செய்து தருவதும் இந்த நிறுவனங்களே. தவிர குறு, சிறு நிறுவனங்களில்தான் வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் குறு, சிறு நிறுவனங்களைக் காக்கவேண்டிய அரசு பெருநிறுவனங்களின் மீது கரிசனம் காட்டுகிறது. தவிர, நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட இ.எம்.ஐ-களைத் திருப்பிச் செலுத்த வங்கிகள் எந்தச் சலுகையும் அறிவிக்கவில்லை. இதையும் இந்த அரசு தட்டிக்கேட்கவில்லை. ஆனால், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற கிரிமினல்களின் வாராக் கடனை மட்டும் அவசர அவசரமாக ரைட் ஆஃப் செய்வது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது” என்றார் கடுமையாக.

கொடீசியா தலைவர் ராமமூர்த்தி யிடம் கேட்டபோது... “மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கைவைத்திருக்கிறோம். நல்லது நடக்கும் என நம்புகிறோம்” என்றார்.

பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் ராகவனிடம் பேசினோம். “ரைட் ஆஃப் என்பது, காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கி வைத்த குழப்பம். ஆனால், தற்போது நாங்கள் செய்திருக்கும் ரைட் ஆஃப் என்பது தள்ளுபடி அல்ல. நிச்சயம் அவர்களிடமிருந்து பணம் திரும்பப் பெறப்படும்” என்றார்.

ஊரை ஏமாற்றுவதற்கு பெயர்தான் ரைட் ஆஃபா?