Published:Updated:

வங்கிப் பங்குகள் வைத்திருப்போர், முதலீட்டாளர்கள் கவனத்துக்கு..!

விகடன் டீம்

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பொறுமை காப்பது அவசியம். ஏனெனில், வங்கிப் பங்குகள் பெரிய அளவிலான இறக்கத்தை ஏற்கெனவே சந்தித்து உள்ளன

Bank
Bank

உலக அளவிலான பொருளாதாரச் சூழல், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. இதனை சீர்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமானது, வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை. 2017-ம் ஆண்டில் இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27-ஆக இருந்தது. பொதுத்துறை வங்கி இணைப்புகள் நடக்கத் தொடங்கியபின் தற்போது இந்த எண்ணிக்கை 12-ஆகக் குறைந்துள்ளது. விரிவான அலசலுக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2kpyPmI

இந்த நிலையில், வங்கிப் பங்குகளை வாங்கி வைத்திருக்கிற, இனி வாங்கப்போகிற முதலீட்டாளர்கள் எந்த விஷயங்களையெல்லாம் கவனித்து முடிவை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவு தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விரிவான பதிலைத் தந்தார் அவர்.

"வங்கி சார்ந்த பங்குகளில் முதலீடு செய்து உள்ளவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை, ஏற்கெனவே இணைப்புக்குள்ளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் பேங்க் ஆஃப் பரோடாவும் நல்ல தேர்வாக இருக்கும். மூன்றாண்டு காலம் முதலீட்டை எடுக்காமல் வைத்திருக்க விரும்புபவர்கள், தற்போது இணைக்கப்படவுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை முதலீட்டுக்கான தேர்வாகக் கொள்ளலாம். ஏனெனில் வங்கிக் கிளைகளை ஒப்பிடும்போது, 11,437 கிளைகளுடன் பெரிய அளவில் செயல்படவுள்ளது.

எல்.ஐ.சி, இந்தியாபுல்ஸ் மற்றும் டி.ஹெச்.எஃப்.எல் ஆகிய நிறுவனங்களின் மொத்த வீட்டுக்கடன் அளவே ரூ.4 லட்சம் கோடிக்கும் குறைவு.

அடுத்த தேர்வாக, கனரா வங்கியை வைத்துக்கொள்ளலாம். இவற்றில் முதலீடு செய்வது பெரிய விஷயமில்லை. ஆனால், பொறுமையாக மூன்றாண்டு காலத்துக்குக் காத்திருக்க வேண்டும். உடனடியாக முதலீடு செய்யவேண்டுமென விரும்புபவர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடாவைத் தேர்வு செய்யலாம். இந்த வங்கியின் இணைப்பு முடிந்து தற்போதுதான் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி மட்டுமே 21% அளவுக்கு, அதாவது சுமார் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு வீட்டுக்கடன் வழங்கியுள்ளது. வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, ஹெச்.டி.எஃப்.சி-க்கு அடுத்ததாக, இந்த வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. எல்.ஐ.சி, இந்தியாபுல்ஸ் மற்றும் டி.ஹெச்.எஃப்.எல் ஆகிய நிறுவனங்களின் மொத்த வீட்டுக்கடன் அளவே ரூ.4 லட்சம் கோடிக்கும் குறைவு. எனவே, எஸ்.பி.ஐ-யில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம்.

Bank
Bank

ஆனால், இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பொறுமை காப்பது அவசியம். ஏனெனில், வங்கிப் பங்குகள் பெரிய அளவிலான இறக்கத்தை ஏற்கெனவே சந்தித்து உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் பெரிய இறக்கம் இருக்காது என்றாலும், பெரிய வருமானத்தை எதிர்பார்க்க முடியாது" என்றார்.

> சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ள பத்து வங்கிகள், அவற்றின் மூலதன அளவு மற்றும் இணைப்பினால் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்தும், பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி இரண்டுக்குமான செயல்பாடுகள் வேறுபடுவதற்கு முக்கியக் காரணம் குறித்தும் அவர் விரிவாகப் பேசியதன் விவரத்தைச் சொல்லும் நாணயம் விகடன் இதழின் கவர் ஸ்டோரியை வாசிக்க > வங்கிகள் இணைப்பு... பங்கு முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

https://www.vikatan.com/news/general-news/an-analysis-of-what-the-share-market-investors-should-do-after-the-bank-merging-process

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/