Published:Updated:

கூட்டுறவு வங்கிகள் இணைப்பு... தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியா?

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு தனக்குச் சாதகமான பல்வேறு அவசரச் சட்டங்களை அமலாக்கி வருகிறது. அதில், மின் திருத்தச் சட்டம்-2020, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சட்டம் ஆகியவை மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. கிராமப்புற மனிதர்கள் பலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கோ, தனியார் வங்கிகளுக்கோ வருவதில்லை. அந்தச் சூழ்நிலையை அந்நியமாக நினைக்கிறார்கள். ஆனால், கிராம கூட்டுறவு வங்கிகளில் உள்ளூர் நபர்கள் இருப்பதால் சர்வ சாதாரணமாக அங்கு சென்று வருகிறார்கள். மற்றொருபுறம், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் சேமிக்கும் வைப்புத்தொகைக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் கிராமப்புற மனிதர்களுக்குப் பல்வேறு வகையில் நெருக்கமாக இருக்கின்றன தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள். கிராமப் பகுதிகளில் பொது விநியோகத் திட்டமும் இந்தச் சங்கம் மூலம்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரச் சட்டம் இயற்றியுள்ளது மத்திய அரசு. இந்தியா முழுவதும் உள்ள 1,482 நகரக்கூட்டுறவு வங்கிகள், பிற மாநிலங்களில் கிளைகள் வைத்துள்ள 58 மல்டி கோ-ஆப்ரேட்டிவ் வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கிகள், இவற்றின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், இவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் இந்தச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்கிறார்கள் விவசாய சங்க பிரதிநிகள்.

இது தொடர்பாக பேசிய, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், ''ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில், நகரக் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வரும் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் அரங்கேறும். நாடு முழுவதும் இருக்கக்கூடிய 90,000 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களை, சிதைக்கும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்கிறோம்.

ஈசன்
ஈசன்

ஒரு காலத்தில் சுதந்திரமாக இயங்கி வந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், இன்றைக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் போய்விட்டது. அரசியல்வாதிகள் தலையீடு ஒருபுறம் இருந்தாலும், கிராமப்புற விவசாயிகள் பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். இங்கு வட்டி குறைவு. ஆனால், தற்போது, தொடக்க வேளாண்மை சங்கங்களின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. லாக்கர் முதல் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கடன் வழங்கும் அதிகாரம்வரை அனைத்தும் மத்திய கூட்டுறவு வங்கிக்குப் போய்விட்டது. அதிக கடனை அங்குப் போய்த்தான் வாங்க முடியும். ஒரு லட்ச ரூபாய்க்குக் கீழ்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் கடன் பெற முடியும்.

4.25 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூல் செய்ய முடியாத ரிசர்வ் வங்கி, 5.50 லட்சம் கோடி டெபாசிட் வைத்துள்ள நகரக் கூட்டுறவு வங்கியைத் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு போகிறது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன்
கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி
ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கூட்டுறவு வங்கிகள்! - பின்னணி என்ன..?

தொடக்க வேளாண்மை வங்கிகள் பல கிராமங்களில் வலிமையாக இருக்கின்றன. அந்த வங்கிகள் வலிமையாக இருப்பதால்தான் தமிழகத்தில், தனியார் வங்கிகள் கிராமங்களுக்குள் நுழைய முடியவில்லை. கிராமப் பொருளாதார வளர்ச்சியில் தொடக்க வேளாண்மை வங்கிகள், முக்கிய பங்கு வகிக்கின்றன. 4.25 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூல் செய்ய முடியாத ரிசர்வ் வங்கி, 5.50 லட்சம் கோடி டெபாசிட் வைத்துள்ள நகரக் கூட்டுறவு வங்கியைத் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு போகிறது. அடுத்தது, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இதன் கட்டுப்பாட்டில் வரும். இது தனியார் வங்கிகளுக்கான வாசல் திறந்து வைக்கும் வேலை. இதனால் கிராமப்புற பொருளாதாரம் சிதையும்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு