Published:Updated:

``கல்விக்கடன் கொடுக்க முன்வராத வங்கிகளில் அரசு நிதியை டெபாசிட் செய்யக் கூடாது!" - சு.வெங்கடேசன்

கல்விக்கடன் முகாம்

`மாணவர்களுக்குக் கல்விக்கடன் கொடுக்க முன்வராத வங்கிகளில் அரசு நிதியை டெபாசிட் செய்யக் கூடாது' எனக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

``கல்விக்கடன் கொடுக்க முன்வராத வங்கிகளில் அரசு நிதியை டெபாசிட் செய்யக் கூடாது!" - சு.வெங்கடேசன்

`மாணவர்களுக்குக் கல்விக்கடன் கொடுக்க முன்வராத வங்கிகளில் அரசு நிதியை டெபாசிட் செய்யக் கூடாது' எனக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

Published:Updated:
கல்விக்கடன் முகாம்

மதுரை மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்க மறுத்து, கல்விக்கடன் முகாம்களைப் புறக்கணிக்கும் தனியார் வங்கியில் இனி அரசு நிதியை டெபாசிட் செய்யக் கூடாது என்ற சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கல்விக்கடன் முகாம்
கல்விக்கடன் முகாம்

இது குறித்து நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியினர், "மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் அதன் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் கடந்த 14-ம் தேதி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் கல்வி நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் வழங்கப்படுவது குறித்துப் பேசிய சு.வெங்கடேசன், 'கடந்த ஆண்டு ரூ.119.7 கோடி மதுரை மாவட்ட மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கப்பட்டது. மாநிலத்திலேயே மிக அதிக கல்விக்கடன் வழங்கப்பட்டதாக மதுரை மாவட்டம் பாராட்டப்பட்டது. ஆனால், அப்போது பிரபல தனியார் வங்கியொன்று 21 மாணவர்களுக்கு ரூ.38.87 லட்சம் மட்டுமே கல்விக்கடனாக வழங்கியது. மற்ற வங்கிகளை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்கும் விழா இரண்டு தினங்களுக்கு முன்பு விரிவாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. அன்றைய தினமே 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கடன் வழங்கப்பட்டது. ஆனால், அந்த முகாமில் குறிப்பிட்ட பிரபல வங்கி கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது.

கல்விக்கடன் விழா
கல்விக்கடன் விழா

கல்விக்கடன் வழங்கவேண்டிய முக்கியத்துவம் குறித்து மாவட்ட நிர்வாகம், மத்திய அரசின் வங்கிகள் துறையின் வழிகாட்டலையும் நடைமுறைப்படுத்த மதுரை மாவட்டத்தில் அந்தத் தனியார் வங்கி தொடர்ந்து மறுத்துவருகிறது' என்று புகார் தெரிவித்தார்.

அது குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

அதில், `மாணவர்களுக்குக் கல்விக்கடன் கொடுக்க முன்வராத வங்கிகளில் அரசு நிதியை டெபாசிட் செய்யக் கூடாது. மேலும், அந்தக் குறிப்பிட்ட தனியார் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி ரூ.50 கோடியை உடனே தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு மாற்ற வேண்டும்' என்று அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுவருகின்றன" என்றனர்.