
கள்ள நோட்டுகளை மாற்றுவதைவிடக் கடினமானது, அரசு வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்களை மாற்றுவது.
twitter.com/Vkarthik_puthur
வதந்திகளை நம்ப வேண்டாம் - பிரதமர் மோடி!
அதான் ஜீ... நீங்க எது சொன்னாலும் நாங்க நம்பறதே இல்லை.
twitter.com/krishnaskyblue
தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கனாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் - பொள்ளாச்சி ஜெயராமன்
ஆபிரகாம் லிங்கன் - நான் என்ன வெள்ளை மாளிகை, பெண்டகன் கான்ட்ராக்ட என் சம்பந்திக்கா கொடுத்தேன்?
twitter.com/kumarfaculty
கூண்டோடு கைலாசம் போனது நித்யானந்தாதான்..!
twitter.com/skpkaruna
‘பம்மல் கே சம்பந்தம்’ கமலும் நம்ம பிரதமரும் ஒரே வழக்கம் கொண்டவர்கள். அவர் ‘கல்யாணம்’ எனும் சொல்லைச் சொல்ல மாட்டார். ‘பம்மல் உவ்வேக் சம்பந்தம்’ என்பார். அதேபோல இவர் சீனாப் பெயரைச் சொல்வதில்லை. கோபம் வந்தால் பாகிஸ்தானை ஹார்ஷா திட்டிட்டு, கையோட நாலஞ்சு மொபைல் செயலிகளைத் தடை பண்ணுவார்.
twitter.com/HAJAMYDEENNKS
ரிசர்வ் பேங்க்கைத் தனியார்மயமாக்க வில்லை என சந்தோஷப்படுவது மட்டுமே தற்போதைய ஒரே ஆறுதல்!
twitter.com/HariprabuGuru
ராகுல் தமிழக வருகையில் நான் தெரிஞ்சிக்கிட்டது என்னன்னா, மனுஷன் கல்யாணம் மட்டும் பண்ணலைன்னா நிம்மதியா ஊர் ஊரா போய் விதவிதமா சமைச்சு சாப்பிடலாம்.

twitter.com/pachaiperumal23
உண்மையிலேயே அந்த ஏழு பேரை விடுவிக்கிற அதிகாரம் யார்கிட்டதான் இருக்கோ?
twitter.com/Suyanalavaathi
90’ஸ் கிட்ஸ்கூட இந்த வாலண்டைன்ஸ் டேவுக்கு அப்டேட் ஆகி லவ் பண்ணிருவாங்க போல... ஆனா இந்த ‘வலிமை’ அப்டேட் மட்டும் வரவே வராதுபோல!
twitter.com/LAKSHMANAN_KL
ம.தி.மு.க-வில் வாரிசு அரசியல் கிடையாது! - வைகோ.
ம.தி.மு.க-வே தி.மு.க-வின் வாரிசாதானே செயல்பட்டுக்கிட்டு இருக்கு?!
twitter.com/ramesh_twetz
ஒரு லிட்டர் பெட்ரோல், ஒரு கிலோ மட்டன், ஒரு கிலோ சின்ன வெங்காயம், ஒரு கறிவேப்பிலைக் கட்டு வாங்கிட்டு வீட்டுக்குள்ள வந்தா ‘வெற்றி நடை போடும் தமிழகமே’ன்னு விளம்பரம் ஓடிட்டு இருக்கு!
twitter.com/manipmp
சில நேரங்களில் கூகுள் மேப் பார்த்தால் தலை சுற்றும்... ‘தல’யையே சுற்ற வைத்துவிட்டது கூகுள் மேப்.
twitter.com/HAJAMYDEENNKS
நவரச நாயகன் கார்த்திக், டி.ஆர், தீபா, அவர் கணவர் போன்றவர்கள் இன்னும் தேர்தல் களத்துக்கு வராதது மீம்ஸ்வாசிகளுக்குப் பேரிழப்பாக இருக்கிறது!
twitter.com/amuduarattai
கள்ள நோட்டுகளை மாற்றுவதைவிடக் கடினமானது, அரசு வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்களை மாற்றுவது.
twitter.com/mrithulaM
மூக்குத்தி புதுசா போட்டு, மாஸ்க் போட்டுக்கிட்டுப் போறதெல்லாம் எவ்ளோ பெரிய துயரம்.
twitter.com/Suyanalavaathi
குகையை விட்டு சிங்கம் வெளியே வந்துவிட்டது. இனி வேட்டை ஆரம்பம் - விஜயபிரபாகரன்.
#விஜயகாந்த்: டேய்... சும்மாருடா!
twitter.com/thecommonman
2016 அ.தி.மு.க தேர்தல் அறிக்கைய எடுத்து அதுல நடுவுல நாலு பக்கத்த கிழிச்சிட்டு, அப்படியே தி.மு.க 2021 தேர்தல் அறிக்கைய எடுத்து அதுல பத்துப் பக்கத்த கிழிச்சி இதுல ஒட்ட வச்சா வர்றதுதான் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை 2021...
twitter.com/iam_nithankrish
ஆயிரம் விளக்குத் தொகுதிக்கு தி.மு.க எம்.எல்.ஏ என்ன செய்தார்? - குஷ்பு
~ பக்கத்துலதான இருக்காரு, கேக்க வேண்டியதுதானே?!
twitter.com/RamuvelK
வங்கதேச விடுதலைப்போராட்டத்தில, இந்தியாவிலிருந்து வந்து, போராடி, சிறைக்குப் போனாரே ஒரு பெரிய மகான்...
அவரைப்பத்தி நீங்க கேள்விப்பட்டி ருக்கீங்களா?
பங்களாதேஷிஸ் : இல்லையே!
அப்ப அவர்தான் எங்க ஜி.

twitter.com/PeterAlphonse7
நான்கு நாள்களுக்கு முன்பு...
கொரோனா நோயாளியை இந்தூரிலிருந்து சென்னைக்கு எடுத்து வர விமான ஆம்புலன்ஸ் கட்டணம் ₹9 லட்சம், உடன் வரும் டாக்டருக்கு ₹35,000
இன்று...
விமான ஆம்புலன்ஸ் ₹24 லட்சம், டாக்டருக்கு ₹3 லட்சம். இதற்கும் மூன்று நாள்கள் காத்திருப்பு.
எங்கே போய் நிற்கும் கொரோனாக் கொள்ளை?
twitter.com/thoatta
இந்த covaxin கோழி, ஸ்டேட் கவர்மென்டுக்காக உரிச்சது, அதனால விலை 600 ரூவா. இந்த covaxin கோழி, பிரைவேட் ஹாஸ்பிட்டல்ஸுக்காக உரிச்சது, அதனால விலை 1,200 ரூவா. அதே கோழி உள்ள ஒண்ணு இருக்கு, சென்ட்ரல் கவர்மென்டுக்கு உரிச்சது, வெறும் 150 ரூபாதான்...
twitter.com/altappu
‘எனக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லை. அதனால் கொரோனா எங்கேயுமே இல்லை’ - இன்றைய தலைமுறையின் ஜாதி, இட ஒதுக்கீடு குறித்த புரிதலை மொழிபெயர்த்தால் இந்த லட்சணத்தில்தான் இருக்கும்.
twitter.com/iKrishS
4 மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சிப் பதவியிலிருந்து விலகணும்னுகூட ராகுலைக் கேக்க முடியாது. அடிக்கடி கேக்குறாங்கன்னு ரொம்ப அட்வான்ஸா பண்ணி வச்சிருக்காப்ல.
twitter.com/shivaas_twitz
டேய் கொரோனா... வருஷா வருஷம் இன்க்ரிமென்ட் டைம்ல உச்சத்துக்குப் போயிடுற... இது நியாயமா?
twitter.com/pachaiperumal23
பூரிக்கு வட்டமா தேய்க்கத் தெரியலை. என்ன பிள்ளைய வளர்த்துருக்காங்களோ!
# சட்டுனு கோபப்பட்டு வெளிய போகவும் முடியாது. ஃபுல் லாக்டௌன் வேற. கையறு நிலை.
facebook.com/Parthiban Gowthamaraj
ஆவி பிடிக்கத் தேவையான பொருள்கள் அப்படின்னு இவங்க அனுப்புற பார்வேர்டு மெசேஜ் பாத்தா பிரியாணி ரெசிபி மாதிரி இருக்கே! அதுல கொஞ்சம் பாஸ்மதி போட்டுட்டா, மசாலா, தண்ணி வேஸ்ட்டாப் போகாது.
twitter.com/sundartsp
கமல் விஷயத்தில் சார்ந்தோர்கள் உஷார் ஆயிட்டாங்க, கமல் மாட்டிக்கிட்டார். ரஜினி விஷயத்தில் ரஜினி உஷார் ஆயிட்டார், சார்ந்தோர்கள் மாட்டிக் கிட்டாங்க.
twitter.com/saysatheesh
திருமணத்துக்கு வைத்திருந்த ₹1.3 லட்சம் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி, எளிமையாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்... மதுரையில் விமானம் வாடகைக்கு எடுத்து ₹7.5 லட்சம் செலவில் வானில் திருமணம் செய்த தம்பதிகள்.
#இரண்டும் தமிழ்நாட்டுச் செய்திகள்தான்!
twitter.com/gurunaatha
எவனோ சாதிய கண்டுபிடிச்சவன்தான் இந்தக் கொரோனாவையும் கண்டுபிடிச்சிருக்கணும்... அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாதுபோல!
twitter.com/gips_twitz
அதுல ஒருத்தன் சொல்றான், ‘ரஜினியும் கொரோனாத் தடுப்புப் பணியாளர்தான்’னு! எப்படின்னு கேட்டா, தேர்தல்ல நிக்காம கொரோனா பரவாமக் கட்டுப்படுத்திட்டாராம்.
facebook.com/iam.suriyaraj
மய்ய உரையாடல்கள்:
‘‘என்னடா, நம்ம கட்சில இருந்து ஒவ்வொருத்தரா கழண்டுட்டு இருக்காங்க. நீ சிரிச்சுனு இருக்க?’’
‘‘அடி போடி இவளே. மொதல்ல, நம்ம கட்சில இவ்வளவு பேர் இருந்திருக்காங்க பாரேன்!’’
twitter.com/mohanramko
அவ்வளவு கறுப்புன்னு சொல்ல முடியாது, அவ்வளவு வெள்ளைன்னு சொல்ல முடியாது...
ஏண்டா, கறுப்புப் பூஞ்சையா, வெள்ளைப் பூஞ்சையான்னு கேட்டா காமெடி பண்றாங்க!
www.facebook.com/ilango.krishnan.
ஹவுஸ் ஓனர்: ஏன் தம்பி, வீட்டுல ஏதும் சண்டையா?
நான்: இல்லியேண்ணே... ஏன் கேட்கறீங்க?
ஹ.ஓ: ராத்திரியெல்லாம் சத்தம் போட்டுப் பேசிட்டே இருந்தீங்க. அதான் கேட்டேன்.
நான்: அது கிளப் ஹவுஸ்ல பேசிட்டு இருந்தேண்ணே.
ஹ.ஓ: என்னது கிளப் ஹவுஸா... தம்பி இது நம்ம ஹவுஸ்... குடித்தனக்காரங்க இருக்க ஏரியா... கிளப் கிப்பெல்லாம் நமக்கு செட் ஆவாது, இப்பவே சொல்லிட்டேன்.
twitter.com/kumarfaculty
‘‘இந்தா... போன் உனக்குத்தான்.’’
‘‘போன்ல யாரு?’’
‘‘சின்னம்மா.’’
‘‘அப்ப என்னைக் கட்சியிலிருந்து நீக்கிடுவாங்களா?’’
‘‘பதறாதே. பேசறது நம்ம சித்தி.’’
facebook.com/Vinod Kumar
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...
எவனாவது/எவளாவது
‘பீஸ்ட்’ ஒரு ‘ஃபீஸ்ட்’ (feast) அப்படின்னு விமர்சனத்தை முடிப்பாய்ங்க..!
twitter.com/barathithambi
ரிலையன்ஸின் லாபம் 2021-ல் ரூ.55,461 கோடி. ஆனால் செலுத்திய கார்ப்பரேட் வருமான வரி ரூ.1,722 கோடி மட்டுமே. இதன் வரி விகிதம் 3.1% மட்டுமே. ஒரு பேராசிரியராக நான் 30% வருமான வரி செலுத்துகிறேன். இதுதான் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை - பேரா. நாகேஷ்வர், உஸ்மானியா பல்கலைக்கழகம்.
twitter.com/Thaadikkaran
நடிகர் சூர்யாவுக்கு எதிராக பா.ஜ.க தீர்மானம்.
# எதுக்கும் ரவுடி பேபி சூர்யா வீட்டுக்குப் பாதுகாப்பு போடுங்கப்பா, பழைய வரலாறு அப்படி...
twitter.com/idumbaikarthi
சொந்தமாக கார்கூட இல்லையென மோடி முதல் ஸ்டாலின் வரை வேட்புமனுத் தாக்கலின்போது சொத்து விவரத்தைத் தாக்கல் செய்தபோது அதனைக் கேட்டுத் தொலைத்த நமக்கு, ‘ஆடி கார் சொகுசு காரில்லை’ என்பதை நம்பித்தொலைப்பதில் என்ன சிக்கல்?

twitter.com/ramesh_twetz
வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்தாங்கன்னா நம்ம மைண்ட் வாய்ஸ்: என்ன பிரச்னைய கொண்டு வந்திருப்பாங்க?
குழந்தைங்க மைண்ட் வாய்ஸ்: என்ன ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்திருப்பாங்க?
twitter.com/balasubramni1
‘‘ஏண்ணே அவனை அடிக்கறீங்க?’’
‘‘கொங்குநாடுன்னு நாம தனி நாடாக அறிவிக்கப்பட்டால், நமக்குக் குல தெய்வம் நாம் கோயில் கட்டுன கொரோனா தேவிதானேன்னு கேட்குறான்!”
twitter.com/FareethS
மன அழுத்தமா இருக்கேன்னு மீன் வாங்கி வளத்தேன் தம்பி. இப்ப மீன் தொட்டி கழுவுறத நினைச்சா அதவிட மன அழுத்தமா இருக்கு தம்பி...
twitter.com/tparaval
வெங்கடேஷ் நடிச்ச தெலுங்குப் படத்தை, தமிழ்ல ‘யாரடி நீ மோகினி’ன்னு ரீமேக் பண்ணி நடிச்சது தனுஷ். இப்ப தனுஷோட அசுரனை தெலுங்குல ரீமேக் பண்ணி நடிக்கிறாரு வெங்கடேஷ்... காலம் எவ்ளோ வேகமா சுழலுது பாத்தீங்களா?
twitter.com/parveenyunus
ரஜினியால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்னு 2020-ல் சொன்ன பழ.கருப்பையா இப்ப கமல் கட்சியில் இருக்கார். சும்மா ஒரு தகவலுக்கு...
twitter.com/Kozhiyaar
‘போன் மாற்றியதில் நம்பர் தொலைஞ்சிடுச்சு’ என்பது போன்ற பொய்களின் வரிசையில் புது வரவு, ‘மாஸ்க் போட்டு இருந்ததால் அடையாளம் தெரியலை!’
twitter.com/drkvm
கொரோனாவால் மக்களுக்கு ஏற்படும் வலியைத் தானும் அனுபவிப்பதாலயே மோடி தாடி வளர்க்கிறார் - அண்ணாமலை
# இப்படி நீங்களே கலாய்ச்சிங்கன்னா நாங்க எதற்கு?
twitter.com/FareethS
ஹலோ பிரதமர் ஆபீசா? என் பொண்டாட்டி அரிசி வாங்கிட்டு வரச் சொன்னா. இட்லி அரிசியா, பிரியாணி அரிசியான்னு சரியா கேக்கல சார், திரும்பி போன் பண்ணுனா சண்டைக்கு வருவா... நீங்கதான் சரியா கேட்ருப்பீங்களே, ‘என்ன அரிசி’ன்னு சொன்னா நல்லா இருக்கும்...
twitter.com/parveenyunus
சண்டே அன்னைக்கு மனைவியிடம் கணவன் திட்டு வாங்கிக்கொண்டிருந்தால், அவன் எலும்பு நிறைய உள்ள மட்டனை வாங்கி வந்துவிட்டான் என அர்த்தம்.
twitter.com/amuduarattai
ஜியோ கம்பெனி கவர்மென்ட் கம்பெனியான்னு பையன் கேட்டான். கவர்மென்ட்தான் ஜியோவோட ஒரு கம்பெனின்னு நான் விளக்கம் சொன்னேன்.
twitter.com/mekalapugazh
எவ்வளவு மக்கள்தொகை என்பது முடிவு செய்வதல்ல ஒலிம்பிக்கின் பதக்கங்களை; எவ்வளவு பணம் விளையாட்டுத்துறைக்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதே முடிவு செய்கிறது. அந்த வகையில் இந்தியாவுக்குக் கிடைத்த பதக்கங்கள் அதிகம்தானோ..!
twitter.com/saravankavi
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை - ஒன்றிய அரசு
# அப்படின்னா அ.தி.மு.க-வையாவது ரெண்டா பிரிக்கலாம்ல...
twitter.com/LAKSHMANAN_KL
வடிவேலு பிரச்னையைத் தீர்த்தது நான்தான்: சீமான்
# இப்பத்தான் வடிவேலுவுக்கு பிரச்னை ஆரம்பமாகுதுபோல?!
twitter.com/Kozhiyaar
விஜய் சேதுபதி ஒரு ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து அடுத்த ஸ்பாட்டுக்குப் போற கேப்ல எல்லாம் படம் நடிக்க ஆரம்பிச்சுட்டாருன்னு நினைக்கிறேன்!
twitter.com/ItsJokker
எவ்ளோ சொன்னாலும் கடைசிவரை கதைகள் தீராத நபர்கள் 2 பேர். ஒண்ணு சீமான், ரெண்டாவது கமல்.
twitter.com/Kannan_Twitz
இந்த உணவகங்கள் முன்னாடி மழையில நனைஞ்சிட்டே வண்டிய வழிமறிச்சு சாப்ட கூப்பிடுற வயசான செக்யூரிட்டிகள பார்த்தாலே ஒரு மாதிரி உள்ளம் கலங்கிடுது. உண்மையிலே இந்தப் பசின்றது சாபம்ல!
twitter.com/balebalu
‘‘ஏண்ணே அவனை அடிக்குறீங்க?’’
“ ‘ஏர் இந்தியாவைத் தனியாருக்கு வித்து மக்களை நஷ்டத்திலிருந்து காப்பாத் திட்டாங்களே, இனிமேலாவது அக்கவுன்ட்ல 15 லட்சம் போடுவாங்களா’ன்னு கேக்குறாம்ப்பா!”
twitter.com/God_Official__
‘நயன்தாராவைவிட பிரியங்கா மோகன் அழகா இருக்காங்க’ன்னுதான் சொன்னேன். உடனே 4 பேர் அன்ஃபாலோ பண்ணிட்டுப் போய்ட்டாங்க. இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமே இல்லை!
twitter.com/amuduarattai
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் குழு. - உச்ச நீதிமன்றம்.
மதுரையில் இருக்கிற எய்ம்ஸுங்களா?