சினிமா
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

ராஷி கண்ணா.
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷி கண்ணா.

எல்லாரிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயமிருக்கிறது.

‘வெங்கி மாமா’ படத்தில் வெங்கடேஷ் - நாகசைதன்யா, ‘பிரதி ரோஜு பேண்டேஜ்’ படத்தில் சத்யராஜ் - சாய் தரம் தேஜ் என சீனியர்கள் - ஜூனியர்கள் கலந்துகட்டி ஆடும் படங்களில் அவர்களுக்கு இணையாய் கெத்து காட்டுகிறார் ராஷி கண்ணா. ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராகவும் நடிக்கிறார். இதுகுறித்துக் கேட்டால், ‘`எல்லாரிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயமிருக்கிறது. அதனால் நான் என் கேரக்டர் எப்படி என்பதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறேன்’’ என சிரித்தபடி சொல்கிறார் இந்த வெள்ளாவி தேவதை.

கிரிக்கெட்டர்களில் கபில்தேவ், சச்சின், கோலி என ஆண் வீரர்களுக்குத்தான் ரசிகர்களின் பட்டாளம் ஏராளமிருக்கும். அதை மாற்றிக் காட்டியவர் மித்தாலி ராஜ். மித்தாலி ராஜின் பயோபிக்கில் டாப்ஸி நடிக்கவிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் வைரல்!.

Mithali Raj
Mithali Raj

பாலிவுட்டில் இது கிரிக்கெட் சீசன். 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை வென்றதை மையமாக வைத்து உருவாகும் ‘83’ படத்தில் ரன்வீர் சிங், கபில் தேவாக நடிக்கிறார். நானிக்கு சில ஆண்டுகள் கழித்து ஹிட்டடித்த தெலுங்குப் படம் ‘ஜெர்சி.’ தோல்வியுற்ற ஒரு கிரிக்கெட் நாயகனின் வாழ்க்கையைச் சொல்லும் இப்படத்தின் இந்தி வெர்சனில் நடிக்கவிருக்கிறார் சாஹித் கபூர்.

Ranveer Singh
Ranveer Singh