Published:Updated:

கட்சி நன்கொடை; 1,917 கோடி ரூபாய் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் பாஜக! - பிற கட்சிகள் எவ்வளவு?

பாஜக
News
பாஜக

2020-2021-ம் நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.752 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. மேலும், கடந்த 2021-2022 நிதி ஆண்டில் அது 154 சதவிகிதம் அதிகரித்து, ரூ.1,917 கோடி நன்கொடை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

Published:Updated:

கட்சி நன்கொடை; 1,917 கோடி ரூபாய் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் பாஜக! - பிற கட்சிகள் எவ்வளவு?

2020-2021-ம் நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.752 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. மேலும், கடந்த 2021-2022 நிதி ஆண்டில் அது 154 சதவிகிதம் அதிகரித்து, ரூ.1,917 கோடி நன்கொடை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

பாஜக
News
பாஜக

தேசியக் கட்சிகள் கடந்த நிதி ஆண்டில் பெற்ற நன்கொடை குறித்த தகவல்களை, தேர்தல் ஆணையம் தனது வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்தத் தரவுகளின்படி, 2020-2021-ம் நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.752 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. மேலும், கடந்த 2021-2022 நிதி ஆண்டில் அது 154 சதவிகிதம் அதிகரித்து, ரூ.1,917 கோடி நன்கொடை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அந்தக் கட்சி 2020-2021 நிதி ஆண்டில் ரூ.74.4 கோடி நன்கொடை பெற்றிருக்கிறது. அது 2021-2022-ம் நிதி ஆண்டில் 633 சதவிகிதம் உயர்ந்து, ரூ.545.7 கோடியாக அதிகரித்திருக்கிறது.

பாஜக
பாஜக

காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையின் அளவு 2020-2021 நிதியாண்டில் ரூ.285.7 கோடியாக இருந்தது. அது 2021-2022-ல் 89 சதவிகிதம் உயர்ந்து ரூ.541.2 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதேசமயம் சி.பி.எம் கட்சி 2020-2021-ல் நன்கொடையாக ரூ.171 கோடி பெற்றிருந்த நிலையில், அது 2021-2022-ல் ரூ.162.2 கோடியாகக் குறைந்திருக்கிறது. ஆனால், சி.பி.ஐ கட்சி பெற்ற நன்கொடை ரூ.2.1 கோடியிலிருந்து, ரூ.2.8 கோடியாக சற்று உயர்ந்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் நன்கொடை வசூல் ரூ.52.4 கோடியிலிருந்து, ரூ.43.7 கோடியாகக் குறைந்திருக்கிறது.

அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சிகள்

அதேபோல, செலவினத்திலும் பா.ஜ.க முதலிடத்தில் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் பா.ஜ.க ரூ.854.46 கோடியை செலவு செய்திருக்கிறது. காங்கிரஸ் ரூ.400 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.268.3 கோடியும், பகுஜன் சமாஜ் ரூ.85.1 கோடியும், சி.பி.எம் ரூ.83.41 கோடியும், சி.பி.ஐ 1.2 கோடியும், என்.சி.பி ரூ.32.2 கோடியும் செலவளித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரையில் தி.மு.க கடந்த நிதியாண்டில் ரூ.318.7 கோடி நன்கொடை பெற்றிருக்கிறது. அந்தக் கட்சியைத் தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ரூ.37.2 கோடியும், பி.ஆர்.எஸ் ரூ.279.4 கோடியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ.93.7 கோடியும் நன்கொடை பெற்றிருப்பதாகத் தேர்தல் ஆணைய வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.