Published:Updated:

மணிப்பூர்: பாஜக மாநில நிர்வாகி சுட்டுக் கொலை - சரணடைந்த குற்றவாளி; மேலும் ஒருவர் கைது

துப்பாக்கிச் சூடு
News
துப்பாக்கிச் சூடு ( ட்விட்டர் )

பா.ஜ.க மாநில நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதான குற்றவாளி காவல்துறையில் சரணடைந்தார்.

Published:Updated:

மணிப்பூர்: பாஜக மாநில நிர்வாகி சுட்டுக் கொலை - சரணடைந்த குற்றவாளி; மேலும் ஒருவர் கைது

பா.ஜ.க மாநில நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதான குற்றவாளி காவல்துறையில் சரணடைந்தார்.

துப்பாக்கிச் சூடு
News
துப்பாக்கிச் சூடு ( ட்விட்டர் )

மணிப்பூர் பா.ஜ.க மாநிலப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் லைஷ்ராம் ரமேஷ்வர் சிங் (50). தௌபல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், நேற்று க்ஷேத்ரி லைகாய் பகுதியிலுள்ள அவரின் இல்லத்தின் முன் காலை 11 மணியளவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது பதிவு எண் இல்லாத காரில் வந்த இருவர், அவரைத் துப்பாக்கியால் சுட்டதில் அவரின் மார்பில் குண்டு பாய்ந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரைத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாஜக தலைவர் லைஷ்ராம் ரமேஷ்வர் சிங்
பாஜக தலைவர் லைஷ்ராம் ரமேஷ்வர் சிங்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, இது தொடர்பான புகாரைப் பதிவுசெய்த காவல்துறை, சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், வாகனத்தை ஓட்டியவராகக் கருதப்படும் பிஷ்னுபூர் மாவட்டம் கெய்னோவைச் சேர்ந்த நௌரெம் ரிக்கி பாயிண்டிங் சிங் என்ற நபர் கைதுசெய்யப்பட்டார். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளியான அயெக்பாம் கேஷோர்ஜித் (46) என அடையாளம் காணப்பட்டவரைக் கைதுசெய்ய காவல்துறை தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. அவருக்கு மக்கள் அடைக்கலம் வழங்கக் கூடாது எனவும், குற்றவாளி தானாக வந்து சரணடையுமாறும் காவல்துறை எச்சரித்தது.

இதற்கிடையே, முக்கியக் குற்றவாளி இம்பால் மேற்கு மாவட்டத்திலுள்ள கமாண்டோ வளாகத்தில் காவல்துறையில் சரணடைந்தார். அவர் ஹாபாம் மராக்கைச் சேர்ந்தவர் என்பதும் அவரிடமிருந்து 32 ரக உரிமம் பெற்ற துப்பாக்கி, ஒன்பது தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்த விசாரணையில், "கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என தௌபல் காவல்துறை கண்காணிப்பாளர் ஹவ்பிஜம் ஜோகேஷ்சந்திரா தெரிவித்திருக்கிறார்.

துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு
ட்விட்டர்

மணிப்பூர் மாநில பா.ஜ.க துணைத் தலைவர் சிதானந்த சிங் செய்தியாளர்களிடம், “இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.