Published:Updated:

சிதம்பரம் வீசும் அஸ்திரங்கள்: மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் வியூகம்!

சிதம்பரம்
சிதம்பரம்

அடுத்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் சமமற்ற நிலைக்குச் சென்றுவிடும். கட்டுமானம் உள்ளிட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பல தொழில் நிறுவனங்கள் முடக்கத்தைச் சந்திக்கும்' என்று இப்போதே எச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

"மத்திய அரசு கடும் நெருக்கடியில் இருக்கிறதுபோலவே?" என்று கழுகாரிடம் கேட்டோம்.

"உலகமே நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் இந்தியா மட்டும் தப்ப முடியுமா? குறிப்பாக, மோடி மூன்றாவது முறையாக ஊரடங்கைத் தள்ளிவைப்பது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றாமல் தவிர்த்ததற்கு அவரது மன அழுத்தம் அதிகரித்ததே காரணம் என்கிறார்கள்.

'அடுத்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் சமமற்ற நிலைக்குச் சென்றுவிடும். கட்டுமானம் உள்ளிட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பல தொழில் நிறுவனங்கள் முடக்கத்தைச் சந்திக்கும்' என்று இப்போதே எச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இது ஒருபுறம் என்றால், பல மாநில அரசுகள் நிதியைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம் மோடி."

சிதம்பரம் வீசும் அஸ்திரங்கள்: மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் வியூகம்!

"ஓஹோ!"

"அதே நேரம் இதுவரை இல்லாமல் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசுக்கு எதிராக சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, சிதம்பரம் வீசும் அஸ்திரங்கள் ஆளுங்கட்சியை அதிரவைக்கின்றன. 'வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்ப, காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி உதவி அளிக்கப்படும்' என்ற அறிவிப்பு அந்தக் கட்சிக்கு தனி இமேஜை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஐடியாவைக் கொடுத்தது சிதம்பரம்தானாம். எனவே, அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து உட்காரவைக்கும் திட்டம் சோனியாவிடம் இருக்கிறது. சமீபத்தில், டெல்லிக்கு நெருக்கமான மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்."

"என்ன விஷயமாம்?"

"இன்னும் இரண்டு ஆண்டுகள் சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் நியமிப்பது... அவரைவைத்து ஆளுங்கட்சிக்கு ஆட்டம் காண்பிப்பது... தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கு முன்பாக ராகுலை தலைமைப் பதவிக்குக் கொண்டுவருவது. இதுதான் சோனியாவின் திட்டமாம். சிதம்பரம் இன்னொரு வேலையையும் செய்துவருவதாக தகவல்."

"அதையும் சொல்லும்..."

"இப்போது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தேசியவாத கட்சி, காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறது. சரத்பவாரும் வயது முதிர்வால் அவதிப்பட்டுவருகிறார். தனக்குப் பிறகு தன் மகள் சுப்ரியா சுலேவை வைத்து கட்சியை நடத்துவதைவிட, தாய்க்கட்சியான காங்கிரஸுடன் தனது கட்சியை இணைத்து மகளுக்கு பவர்ஃபுல்லான பதவியை வாங்கிவிடலாம் எனத் திட்டமிடுகிறார். இதன் பின்னணியிலும் சிதம்பரம் இருக்கிறார் என்கிறார்கள்."

சிதம்பரம் வீசும் அஸ்திரங்கள்: மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் வியூகம்!

"அது சரி, தமிழக அரசியல் நிலவரம் எப்படியிருக்கிறது? - மிஸ்டர் கழுகு சொன்ன விரிவான தகவல்கள் இங்கே > தமிழக அரசுமீது புகார் வாசித்த ஆளுநர்! நிலைமையைச் சமாளித்த தலைமைச் செயலர் https://bit.ly/3dCZNNB

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு