Published:Updated:

``திமுக ஆட்சி செய்வதால், பெண்கள் சுருக்குப்பையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்!" - அண்ணாமலை

``தி.மு.க ஆட்சி செய்வதால், பெண்கள் அனைவரும் தங்களது சுருக்குப்பையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். திமுக-வுக்குத் தயவு செய்து ஓட்டுப் போடாதீர்கள்’’ என்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்திலிருக்கும் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் பேசிய அண்ணாமலை, ``தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்களே ஆகின்றன. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்திருக்கிறாகள். கல்விக்கடன், நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்றார்கள். கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி செய்வதால், பெண்கள் அனைவரும் தங்களது சுருக்குப்பையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். முதலமைச்சர் ஸ்டாலின் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளில் போகிறார்.

"அண்ணாமலை என்ன கடவுளா?" - பரவும் ஆடியோ; விழுப்புரம் பாஜக தலைவர் கலிவரதனைச் சுற்றும் சர்ச்சை!
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

ஜல்ஜீவன் திட்டம் மூலம் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் இந்தப் பகுதிக்கு பா.ஜ.க அரசு மூலம் கொண்டுவரப்படும். குழந்தை பெற்றெடுப்பது பாரதிய ஜனதா கட்சி. அதற்குப் போட்டி போட்டு பெயர் வைப்பது திராவிட முன்னேற்றக் கழகம். திமுக-வுக்குத் தயவுசெய்து ஓட்டுப் போடாதீர்கள். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்து 35 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை. இந்துக் கோயில்கள் மூடப்பட்டிருப்பதைத் திறக்கக் கோரி வரும் 7-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். பொய்க் குற்றச்சாட்டு சொல்லி எம்.ஜி.ஆரை வெளியேறவைத்த திமுக-வின் துரோகத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்’’ என்றார் அண்ணாமலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு