கட்டுரைகள்
Published:Updated:

ரக்கட் பாய்ஸ்; பப்ளி கேர்ள்ஸ்... தோற்றத்துக்கு முக்கியத்துவம் தருபவரா நீங்கள்?

ரக்கட் பாய்ஸ்; பப்ளி கேர்ள்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரக்கட் பாய்ஸ்; பப்ளி கேர்ள்ஸ்

ரக்கட் பாய், ஃப்ரீக்கி கேர்ள் எல்லாம் இப்போது எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தைகளாக மாறிவிட்டன. நாமும் டிரெண்டில் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள சிலர் இப்படியான தோற்றத்துக்கு மாறலாம்;

`பையன் கை நிறைய சம்பளம் வாங்குறான்’, ‘தங்கமான பொண்ணு’ - இப்படி அறிமுகம் செய்து வரன் தேடுவதெல்லாம் 90-ஸ் கிட்ஸ் காலக் கதை. 2கே கிட்ஸின் விருப்பங்கள் வேறு. ‘ரக்கட் பாய்’, ‘சாக்லேட் பாய்’, ‘பப்ளி கேர்ள்’, ‘சைஸ் ஜீரோ கேர்ள்’, ‘ஹோம்லி கேர்ள்’ என அவர்களின் சாய்ஸுக்கான அர்த்தம்கூட நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற வெளித்தோற்றம்தான் இன்றைய காலகட்டத்தில் இணையைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியத்துவம் பெறுகிறதா; தோற்றத்தைப் பார்த்து பார்ட்னரைத் தேர்வு செய்யலாமா..?

மாதவன் தொடங்கி சித்தார்த் வரை சாக்லேட் பாய்ஸ் பலரை நாம் கடந்து வந்துவிட்டோம். எப்போதும் ஒரே மாதிரியான பெர்சனாலிட்டியை மெயின்டெயின் செய்வது, மடிப்பு கசங்காத சட்டை, பேஸ்டல் கலர் டிரஸ், ஓடிப்போய் உதவும் குணம், கெட்ட வார்த்தைகள் பேசாதது என்று ஜென்டில்மேனாகவே வாழ்வதுதான் சாக்லேட் பாய்ஸின் குணங்களாகச் சொல்லப்படுகிறது.

ப்ரீனு
ப்ரீனு

சாக்லேட் பாய்ஸுக்கு நேரெதிர் ரக்கட் பாய்ஸ். முகமே தெரியாத அளவுக்கு தாடி, ‘எனக்கு அழத் தெரியாது’, ‘எமோஷன்ஸை வெளிக்காட்டத் தெரியாது’ என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்து அவற்றை மெயின்டெயின் செய்யும் உதார் பசங்களையே ரக்கட் பாய்ஸ் என்கிறார்கள். இந்த ரகம் போக, வீட்டுக்கு அடங்கி நடக்கும் ஹோம்லி பாய்ஸ் வகையினரும் உண்டு. ‘இதெல்லாம் பாய்ஸ்க்கு மட்டும்தானா’ என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

துப்பட்டா போடும் பெண்கள் ஹோம்லி என்றும், மாடர்ன் டிரஸ் பெண்கள் ஃப்ரீக் என்றும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொஞ்சம் பருமனான பெண்களை பப்ளி என்றும், மெலிந்த தோற்றத்தில் இருப்பவர்களை ஸ்லிம்மி, ஸ்கின்னி என்றும் சொல்கிறார்கள்.

இணையைத் தேர்ந்தெடுக்கும்போது, ’ரக்கட் பாய்தான் என் சாய்ஸ்’, ‘ஹோம்லி கேர்ள்தான் பிடிக்கும்’ என இப்படியான வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் ப்ரீனு.

ரக்கட் பாய்ஸ்; பப்ளி கேர்ள்ஸ்... தோற்றத்துக்கு முக்கியத்துவம் தருபவரா நீங்கள்?

“ரக்கட் பாய், ஃப்ரீக்கி கேர்ள் எல்லாம் இப்போது எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தைகளாக மாறிவிட்டன. நாமும் டிரெண்டில் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள சிலர் இப்படியான தோற்றத்துக்கு மாறலாம்; அல்லது இவை சார்ந்த கருத்துகளைப் பேசலாம். உண்மையில் தோற்றம் என்பது ஒருவரின் குணம் கிடையாது. அது அவரது பர்சனல் அவுட்லுக். குணம்தான் ஒருவரின் இயல்பு. ஓர் ஆணுக்குப் பெண்ணின் மீதும், பெண்ணுக்கு ஆணின் மீதும் ஏற்படும் ஈர்ப்பு வேண்டுமானால் வெளித்தோற்றத்தை மையமாகக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், ஒருவரிடம் பழகும்போதுதான் அவரின் இயல்பை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ரக்கட் பாய்ஸ்; பப்ளி கேர்ள்ஸ்... தோற்றத்துக்கு முக்கியத்துவம் தருபவரா நீங்கள்?

ஒரு ரிலேஷன்ஷிப் நிலைத்து நிற்க வேண்டுமானால் அதற்கு பரஸ்பர அன்பு, புரிந்துகொள்வது, பார்ட்னருக்கு மரியாதை கொடுப்பது, சமமாக நடத்துவது, எமோஷனல் பேலனஸ் என்று உணர்வுகள் சார்ந்த நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ரக்கட் பாய்ஸுக்கு அழத் தெரியாது, சாக்லேட் பாய்ஸுக்குக் கோபம் வராது, ஹோம்லி கேர்ள்ஸ் அமைதியாக இருப்பார்கள்... இவையெல்லாம் நாமே உருவாக்கிக்கொண்டவை. இந்தக் கனவுலகத்தை உடைத்துவிட்டு உங்கள் இயல்புக்கேற்ற பார்ட்னரைத் தேர்வு செய்யுங்கள். காலத்துக்குத் தகுந்தாற்போல் காதலிக்கும் விதம் வேண்டுமானால் மாறலாம். ஆனால், காதல் என்பது எப்போதும் அன்பை அடிப்படையாகக் கொண்டதுதான். அன்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள், வாழ்க்கை இனிமையாக இருக்கும்.’’