ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் ‘ப்ரெக்ஸிட்’ விவகாரம், மீண்டும் பிரிட்டனைக் கலங்கடித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்காக புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கொண்டுவந்த முதல் தீர்மானமே நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் (house of commons) தோற்கடிக்கப்பட்டதால், ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் அந்த நாடு, பொதுத்தேர்தலைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிட வேண்டும் என்பது, பிரிட்டனின் சமீபத்திய ஆட்சியாளர்களின் விருப்பம். கடந்த 1973-ல் ஐரோப்பியப் பொருளாதார ஒன்றியத்துடன் இணைந்த பிரிட்டன், 2016-ல் ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தது. அயர்லாந்து எல்லைப் பிரச்னை, ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமை, ஒன்றியத்துக்கு பிரிட்டன் செலுத்த வேண்டிய 39 பில்லியன் பவுண்ட்... இவை எல்லாம் சேர்த்தே பிரிட்டனை இந்த முடிவுக்குத் தள்ளின. மூன்று ஆண்டுகள் கடந்தும் பிரச்னைக்குத் தீர்வு காண இயலவில்லை. இதனாலேயே முன்னாள் பிரதமர் தெரசா மே பதவி இழக்க வேண்டியிருந்தது. இப்போது ஜான்சனின் முறை.

இந்தப் பிரச்னையை முன்வைத்து, செப்டம்பர் 3-ம் தேதி நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்தார் ஜான்சன். ஏனெனில், மீண்டும் அக்டோபர் 14-ல் நாடாளுமன்றம் கூடும்போது, ப்ரெக்ஸிட் குறித்து விவாதிக்க போதிய அவகாசம் இருக்கக் கூடாது என நினைத்தார். எப்படியும் அக்டோபர் 31-ல் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.

ஆனால், செப்டம்பர் 5-ம் தேதி ஜான்சன் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. எந்த ஒப்பந்தமும் போட்டுக்கொள்ளாமல் தடாலடியாக ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்கிற ‘ஒப்பந்தம் இல்லாத ப்ரெக்ஸிட்’டை (no deal Brexit) வலியுறுத்தி ஜான்சன் கொண்டுவந்த தீர்மானத்தைத் தோற்கடித்து, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மையை இழக்க வைத்துவிட்டன எதிர்க்கட்சிகள். ஆளும் கட்சியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற அதிருப்தி உறுப்பினர்களும் ஜான்சனின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். கொந்தளித்துப் போன ஜான்சன், `அக்டோபர் 15-ல் பொதுத்தேர்தல்’ என்று குண்டை தூக்கிப் போட்டுள்ளார். பிரெக்ஸிட்டை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இரு தரப்பினருமே ஜான்சனின் முடிவைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

ஜான்சனின் தடாலடிக்கு அசராத எதிர்க்கட்சிகள், தேர்தலுக்குத் தயார் என பதிலடி கொடுத்துள்ளன. ஆனால் அதற்கு முன், ‘நோ டீல்’ ப்ரெக்ஸிட் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன. தேர்தல் வந்தால், அதிருப்தியாளர்களை வெளியேற்றி ப்ரெக்ஸிட் ஆதரவாளர்களைத் திரட்டி ப்ரெக்ஸிட்டை நிறைவேற்றி விடலாம் எனத் திட்டமிட்டுள்ளார் ஜான்சன். ஆனால், தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தின் மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்த நிலையில், அது மிகவும் கடினம்.

ஒப்பந்தமில்லாத வெளியேற்றம் ஒரு பேரழிவை உருவாக்கும் என, முன்பே ஐரோப்பிய யூனியன் எச்சரித்திருந்தது. பிரிட்டன் பவுண்டின் மதிப்பு, ஏற்கெனவே கடுமையாகச் சரிந்துள்ளது. இது மேலும் சரியும்; உணவு, மருந்து, எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இது மற்ற ஐரோப்பிய நாடுகளையும் பாதிக்கும். தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரிட்டினை நம்பியுள்ள பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், ஸ்பெயின் ஆகியவை, பொருளாதாரச் சவால்களைச் சந்திக்க நேரிடும்.

ஜான்சனின் அரசியல் சூதாட்டம், பிரிட்டனை பொதுத்தேர்தல் வரை இழுத்துவந்துள்ளது. இதில் வென்றால் அவர் ராஜதந்திரி; தோற்றால் பிரிட்டன் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பதவிவகித்த பிரதமர் ஆவார்.

பாதிக்கும் முதலீடு!

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் இரண்டுமே இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இந்தியாவின் 30 சதவிகித ஐ.டி சேவை ஏற்றுமதி, பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியத்துடன்தான் நடக்கிறது. பிரிட்டன், இந்தியாவின் மூன்றாவது பெரிய நேரடி அந்நிய முதலீட்டு நாடு. பிரிட்டன் - இந்தியா இடையிலான வர்த்தகம் மட்டும் சுமார் 20 பில்லியன் பவுண்டு. சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்பம், உணவு உற்பத்தியில் இங்கிலாந்து, இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இவை நிச்சயமாக பாதிக்கும்.

தற்போதுள்ள குழப்பமான சூழல், இந்திய முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இல்லை. தற்போது வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்பட்டால், தொழில் நிறுவனங்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்படும். வேலையாட்களை, கணிசமாகக் குறைக்க வேண்டிவரும். அதே நேரம், பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு நாடுகளும் மாற்று முதலீட்டாளர்களைத் தேடும். அது, இந்தியாவுக்கு நீண்டகால சாதகமான அம்சமாக மாறும். தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, ராணுவ உற்பத்தி மற்றும் நிதி போன்ற பிரிவுகளில் இந்தியா இரு நாடுகளின் ஒத்துழைப்பை தனித்தனியே பெற முடியும்.