Published:Updated:

`பெட்ரோல், டீசல் மீது புதிய வரி; மின்சார வாகனங்களுக்கு சலுகை! மத்திய பட்ஜெட் 2019 முக்கிய அம்சங்கள்

கலிலுல்லா.ச

வரி விதிப்பது தொடர்பான பல்வேறு அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

2019-20-ம் ஆண்டுக்கான நிதிதிலை அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், ``பொறுப்பாக, தவறாமல் வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி. ஐந்து ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அது ரூ.6,30,000 கோடியிலிருந்து ரூ.11,37,000 கோடியாக உயர்ந்துள்ளது. நான் இங்கு சில புறநானூறு வரிகளைச் சொல்ல விரும்புகிறேன். தமிழில் அதைக் கூற சபாநாயகர் எனக்கு அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கூறிவிட்டு புறநானூறு பாடல் வரிகளான `யானை புகுந்த நிலம்’ என்ற பாடலின் சில வரிகளைக் கூறி விளக்கம் அளித்தார்.”

மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர்

மேலும், ஒரே நாடு, ஒரே மின்சாரம் விநியோக அமைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின் விநியோகம் செய்யப்படும், சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம், 2024-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் நீர் விநியோகம் போன்ற பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார்.

அதேபோல வரி விதிப்பது தொடர்பாகப் பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அவை, ``வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு பான் அல்லது ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தலாம். வங்கிகளிலிருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் பட்சத்தில் அதற்கு இரண்டு சதவிகிதம் வரி விதிக்கப்படும். வருமான வரித்துறையின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நிர்மலா
நிர்மலா

ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் அதற்கு 7 சதவிகிதம் வரி விதிக்கப்படும். ஆண்டு வரவு செலவு ரூ. 400 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த நிறுவனங்கள் 25 சதவிகித வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படும். வரவு செலவு ரூ. 250 கோடிக்கும் குறைவாக இருந்தால் அந்த நிறுவனங்கள் 25 சதவிகிதத்துக்கும் குறைவான வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படும்.

சரக்கு மற்றும் சேவை வரி மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை என்று குறிப்பிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், கூடுதலாகப் பிடித்தம் செய்யப்பட்ட வரி உடனடியாகத் தாமாகவே கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

பட்ஜெட்
பட்ஜெட்
ஆண்டுக்கு ஐந்து லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.
மத்திய பட்ஜெட்

ரூ.2 கோடி முதல் 5 கோடி வரையிலான தனிநபர் வருவாய் மீதான வருமான வரி 3 சதவிகிதமாக இருக்கும், ரூ. 5 கோடிக்கும் மேற்பட்ட வருவாய் மீதான வரி 7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பொருள்களுக்கான அடிப்படை சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் ஆபரணக் கற்கள் மீதான சுங்க வரி 10 சதவிகிதத்திலிருந்து 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்புக்காகப் பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்குக் கூடுதல் வரியாக ஒரு ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. கச்சா மற்றும் பதப்படுத்தப்பட்ட தோல் ஏற்றுமதிக்குச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது.

பெட்ரோல்
பெட்ரோல்

நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கும் என்றும் கடந்த நிதியாண்டில் நாட்டில் 210 கிலோமீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதிய வாடகைச்சட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்படும். போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மக்கள் தங்கு தடையின்றி பயணம் மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை திட்டம்.

ஆண்டுக்கு ஐந்து லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் . நேரடி வரி வருவாய் அதிகரித்திருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிதித்துறை அமைச்சர்
நிதித்துறை அமைச்சர்

இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும். வீட்டு வசதி நிதித் துறையை இந்திய ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்தும். அடுத்த ஐந்தாண்டுகளில் கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

சிறுவியாபாரிகள், சிறு கடைகள் போன்றவற்றில் ஆண்டு விற்றுமுதல் ஒன்றரை கோடி ரூபாய்க்குள் இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இதன்மூலம் 3 கோடி வர்த்தகர்கள் பயன்பெறுவார்கள்.

2022 ஆம் ஆண்டுக்குள் ஏழைமக்களுக்காக ஒருகோடியே 95 லட்சம் வீடுகள் கட்டப்படும். 114 நாள்களுக்குள் ஏழைகளுக்கான வீடுகள் கட்டித் தரப்படும். அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்படும். பசுமைத் தொழில் நுட்பம் மூலம் 30 கிமீ தூர சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.வேளாண் சார்ந்த ஊரகத் தொழில் துறையில் 75 ஆயிரம் தொழில் முனைவோரை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.